Wednesday, 6 June 2012

தேங்காய் பாலின் மருத்துவ குணங்கள் [ புதன்கிழமை, 06 யூன் 2012, 01:57.44 மு.ப GMT ] புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது. தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின்


தேங்காய் பாலின் மருத்துவ குணங்கள்
[ புதன்கிழமை, 06 யூன் 2012, 01:57.44 மு.ப GMT ]
புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெருவயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் 

ள்[ புதன்கிழமை, 06 யூன் 2012, 01:57.44 மு.ப GMT ]புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெருவயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் 

Monday, 4 June 2012

ரத்தத்தை உற்பத்தி செய்யும் மாதுளை


ரத்தத்தை உற்பத்தி செய்யும் மாதுளை
[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூன் 2012, 02:19.25 மு.ப GMT ]
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.
இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும்.இரத்த விருத்தி ஏற்படும். சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.
அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும்.
காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும்.
மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும்.
இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

Thursday, 24 May 2012

தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்


நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.
 
ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.
 
கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.
 
தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.
 
இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.
 
நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.
 
உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.
 
பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.
 
சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
 

Friday, 11 May 2012

உடல் எடையை குறைக்கும் வெந்தய


உடல் எடையை குறைக்கும் வெந்தயம்
[ வெள்ளிக்கிழமை, 11 மே 2012, 02:24.13 மு.ப GMT ]
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால்.
இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும்.
இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.
வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்து

Saturday, 14 April 2012

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு


முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு
[ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 04:11.32 பி.ப GMT ]
எல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது.
இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.
சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்து விடுகிறது.
குண்டான மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது குண்டான மனிதர்களை மேலும் குண்டாக்கி விடும்.

வெயில் காலத்திற்கான டிப்ஸ்



சுகாதார செய்தி
வெயில் காலத்திற்கான டிப்ஸ்
[ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 02:47.23 மு.ப GMT ]
வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர் தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே நல்லது.
இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.
வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.
டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.
உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ‘ஹாய்’ சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.
உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.
இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.(இரும்புச்சத்தும் கூடும்

Sunday, 5 February 2012

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் உலர் திராட்சை


மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் உலர் திராட்சை
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:04.49 பி.ப GMT ]
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன.
நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும்.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
அடங்கியுள்ள சத்துக்கள்: உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
ரத்தசோகையை கட்டுப்படுத்தும்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
காமாலை நோய் குணமடையும்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.
உடல்புஷ்டிக்கு: இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.
மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையு