Saturday, 15 December 2012

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து.


ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து..!!

அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம், கிராம்பு 35 கிராம், சிறுனாகபூ 35 கிராம், ஜாதிக்காய் 35 கிராம், லவங்க பத்திரி 35 கிராம், சவ்வியம் 72 கிராம், பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும்.
பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடுங்கள்.
நன்றாக சூடு ஆறியபிறகு அதில் 50 மில்லி தேனையும், 700 மில்லி நெய்யையும் போட்டு நன்றாக கிளறி காற்று போகாத ஒரு பாட்டலில் இட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நாட்கள் கழித்து ஒரு கோலிகுண்டு அளவு மூன்று நேரம் உணவுக்கு முன்னாள் 90 நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். ஆண்மை குறைவு நீங்கும்.

மலடு நீக்கும் அதிமதுரம்!


மலடு நீக்கும் அதிமதுரம்!

குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண், பெண்களின் குழந்தை பேறின்மையை போக்கும் என்றும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம்.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
மலடு நீங்கும்
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
அதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை இரண்டு முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிரசவத்திற்கு முந்தைய உதிரப்போக்கு
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை குணமடையச்செய்யலாம்.
தாய்ப்பால் பெருகும்
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
சிறுநீரக கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது.
இது சிறுநீர் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும்.
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
தொண்டைக் கட்டு இருமல் சளி
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். அதிமதுரம் லேகியம் சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
ஆஸ்துமா குணமடையும்
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
வழுக்கை நீங்கி முடி வளரும்
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!


ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!

உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
பித்த நோய்கள்
அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும். ஆரைக் கீரைக்கும் பித்தம் தொடர்பான கோளாறுகளை போக்கும். அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும்.
பொன் போன்ற மேனி
சருமம் பொன்போல பிரகாசிக்க தினசரி பொன்னாங்கண்ணி கீரையை சூப் வைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை கடைந்து உணவுடன் நெய் சேர்த்து அருந்த உடல் வலுப்பெறும்.
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.
நரைமுடி அகலும்
முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும். கரிவேப்பிலையை நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.
தாது விருத்தியாகும்
அரைக்கீரை அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும். இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.
எலும்பு வளர்ச்சி
புதினா கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். கொத்தமல்லிக்கீரையை துவையல் அரைத்து சாப்பிட பித்தம் குணமாகும்.
வயிற்றுப் புண் குணமாகும்
பசலைக்கீரை சாப்பிட நீர் கடுப்பு, வெள்ளை வெட்டை நீங்கும். மிளகு தாக்காளி கீரைக்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறு

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும்…!!


விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும்…!!

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-
ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
botonical name- myristica fragrans
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் .
ஜாதிக்காயை ஊறுகாயாக சாப்பிடவே கூடாது.
ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விண்டு முந்துதல் நிற்கும்.ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.விந்து முந்துதல் சரியாக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது.விவரம் அறிய கேள்வி கேளுங்கள்..
இந்த பாட்டு படித்தால் -எளிதாக புரியும் ..


ஜாதிக்காய்
தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு
ஜாதி பத்ரி
சாதி தரும் பத்திரிக்குத் தாபச் சுரந்தணியும்
ஓது கின்ற பித்தம் உயருன்காண்-தாது விர்த்தி
யுண்டாங் கிரகணியோ டோதக் கழிச்சலறும்
பண்டாங் குறையே பகர்

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்…


ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்…

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு ஆண்களது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் தம்பதியரிடையே சரியான அன்பு வெளிப்படுத்த முடியாதது என்பனவையே காரணங்களாக இருக்கும். ஆகவே இத்தகையவற்றை சரியாக போக்கி, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ் இருக்கிறது.
* ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆகவே தேவையில்லாமல் மருத்துவர்களிடம் சென்று பணத்தை செலவழிப்பதை விட, ஆரோக்கிய மற்றும் பாலுணர்வை, ஆண்மையைத் தூண்டும் உணவுகளான சீஸ், சிக்கன், ஓட்ஸ், கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், கேரட், மிளகு, முக்கியமாக மீனில் சாலமனை சாப்பிட வேண்டும்.
* புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். நிறைய ஆண்களுக்கு இந்த பழக்கம் தேவையில்லாமல் இருக்கிறது. இவற்றை பிடிப்பதால், ஆண்மை மட்டும் குறைவதில்லை, உடலும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே இதனை நிறுத்த வேண்டும். முடியவில்லை என்றால் கர்ப்பமாகும் வரையிலாவது சாப்பிடாமல் இருக்க முயற்சியுங்கள்.
* அளவுக்கு அதிகமான எடை மற்றும் குண்டாக இருப்பது கூட, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. ஆகவே அனைத்து ஆண்களும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அளவுக்கு அதிகமாகவும், குறைவாகவும் உடல் எடை இருக்கக்கூடாது. மேலும் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் உறுப்புகள் நன்கு செயல்பட, ஆரோக்கியமான டயட் மற்றும் உடல் எடை இருக்க வேண்டும். எப்போதும் உடலை நன்கு பிட்டாக வைத்திருக்க வேண்டும். வேண்டுமென்றால் தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
* ஆண்களின் ஸ்பெர்ம்கள் எந்த நேரத்தில் சரியான அளவு இருக்கும் என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, காலை நேரம் தான் அதற்கு சரியான நேரம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரத்தில் காதலை வெளிப்படுத்துவதற்கு, காலை நேரத்தில் காதலை வெளிப்படுத்தினால் மிகவும் சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர். அதுவும் இருவருக்கும் பிடித்திருந்தால் மட்டும் காலையில் செய்ய வேண்டும்.
* நிறைய ஆய்வுகள் அதிக அழுத்தத்தின் காரணமாக, தம்பதியர்களுக்கிடையே உள்ள காதல் தடைப்பட்டு, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் அமைதியாக, எதற்கும் டென்சன் ஆகாமல், அடிக்கடி யோகா செய்தால், வாழ்க்கை நன்கு அமைதியாக, அன்பாக போவதோடு, மனமும் ரிலாக்ஸ் ஆகும்.
எனவே ஆண்கள் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டு வாழ்ந்து வந்தால், ஆண்மை அதிகரிப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக செல்லும்.

மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை


மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை

குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை மனிதர்களை தாக்குவதோடு மலடாகவும் மாற்றிவிடுகிறது. மலட்டுத்தன்மையை தடுக்க உணவுகளை எவ்வாறு உண்ணவேண்டும், எவற்றை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை இளைய தலைமுறையினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது தவறான நடைமுறையாகும். அன்றாடம் புதிதாக சமைத்த உணவுகளை உண்ணவேண்டும் அதுதான் ஆரோக்கியம்.
ரெடிமேட் மசாலாக்கள்
பண்டைய காலங்களில் செயற்கை நிறம், மணம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஃபாஸ்ட் புட் போன்றவை இல்லை. ஆனால் இன்றைக்கு மஞ்சள்தூள் தொடங்கி மிளாகாய்த்தூள், சாம்பார் பவுடர் என கலர் கலராய் ரெடிமேட் மசாலா உணவுப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் செயற்கை மணத்திற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கைப் பொருட்கள்தான் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த செயற்கை மசாலாத்தூளில் எடையை அதிகரிப்பதற்காக அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்க்கப்படுவதாக சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த கிழங்குமாவு கெட்டுவிடும் என்பதால் அதற்காக பிரசர்வேடிவ் சேர்க்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
சினைப்பை நீர்க்கட்டி

பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸார்டர்(பிசிஒடி) என்ற சினைப்பை நீர்க்கட்டியை கரைக்கச் செய்யும் மிகப்பெரிய மருந்து மிளகு ரசம். மிளகு, சீரகம், பூண்டு, கட்டிப்பொருங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இந்த ஓவரியன் நீர்க்கட்டிகள் தன்னால் கரையும் என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் கொள்ளுரசம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் சீராகும் என்கின்றனர் நிபுணர்கள்.
விந்து உற்பத்தி அதிகரிக்க

சின்ன வெங்காயம் சாம்பார் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். நல்லெண்ணையில் சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டாலும் ஆண்களுக்கு விந்து உஉற்பத்தி அதிகமாகும்.
திராட்சை, உலர்திராட்சைப் பழங்கள், சோயா, வால்நட், முருங்கைப் பூ போன்றவை பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கும். மலட்டுத்தன்மையை குணமாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
மண்பானை சமையல்

பண்டைய காலங்களில் வீடுகளில் மண்பாண்டங்களில் சமைத்தனர். அதனால்தான் எளிதாக ஐந்து, ஆறு குழந்தைகளை கூட பெற்று ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைக்கு சமைக்கும் பாத்திரங்களும், முறைகளும் கூட மாறிவிட்டன. இதனால்தான் விந்தணு உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது. மண்பானையில் சமைத்தால் விந்து நீர்த்துப்போவதை தடுக்கும். விந்துவை கெட்டிப்படுத்துவதோடு உற்பத்தியை அதிகமாக்கும்.

மண்பாண்டச் சமையல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும். சரியான உணவை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் உடல்குறை நீங்குவதோடு குழந்தைப் பேறு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சாதிக்காய்..!!


செக்ஸ் உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சாதிக்காய்..!!

செக்ஸ்… ஓரு நல்ல உடற்பயிற்சி. கணவனும், மனைவியும் உச்சத்தில் இருக்கும் போது இருவரது உடலிம் அனைத்து உறுப்புகளும் படுவேகமாக இயங்குகிறது. இந்த வேலை முடிந்ததும் இருவரது உடலிலும் நச்சு திரவம் வியர்வையாக வெளியேறுகிறது. எனவே கணவன்-மனைவியும் அடிக்கடி தாம்பத்யம் கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று- சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திருமணமான கணவன்-மனைவியும் ஓராண்டுக்குள் குழந்தை பேறு இல்லை என்றால் ஊரார் அந்த பெண்ணை பழி பேசுவார்கள். கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகிறது. இன்னும் ஒரு புழு பூச்சி கூட இல்லையா? என ஏளனம் பேசுவார்கள். இதற்கான காரணம் தாம்பத்யம் உறவில் திருப்தி இன்மை, ஆண் உறுப்பு விறைப்பு இல்லாதது, விரைவில் சக்தி வெளியேறுதல், இதுதான் குழந்தை பேறின்மைக்கு காரணம் என்று  மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆண்மைக்கு நல்ல மருந்தாக, செக்ஸ் இன்பத்துக்கு நல்ல விருந்தாக திண்டுக்கல்லில் செக்ஸ் காய் என்கிற சாதிக்காய் விற்பனை ஆகிறது. சமையலில் மணம் சேர்க்க நம் முன்னோர்கள் உபயோகித்த பொருட்கள் மருந்தாக நம் ஆரோக்கியத்தை காக்க கூடியவை. அந்த வகையில் சாதிக்காய் ஆண்மை விருத்தியை அதிகரித்து இன்ப நேரத்தை நீட்டிக்க வல்லது.

பொதுவாக மணம் உள்ள பொருள் என்றுமே வீரியத்தை தூண்டக்கூடியது. உதாரணமாக மல்லிகை பூ அணிந்து கன்னியர் பாதையை கடந்தாலே காளையர்களுக்கு ஒரு வீரியத்தை தூண்டுகிறது. இது போல்தான் சாதிக்காய் நறுமணத்தை தரக்கூடியது.  எனவே தான் சாதிக்காயும் ஆண்மையை தூண்டும் மருத்துவ குணம் உடையது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதிக்காய் இந்தோனேசியா, மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப்பட்டாலும் இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், பின்னர் ஐரோப்பா, மேற்கிந்திய தீவுகளிலும் சாதிக்காய் வளர்கிறது. சாதிக்காய் பற்றி சித்தமருத்துவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

சின்னாளப்பட்டி அருளகம் சித்த வைத்திய சாலை சித்த மருத்துவர் எஸ்.சிவமுருகேசன்:-

சாதிக்காய் அழகிய நறுமணம் உள்ள இலைகளையும், மஞ்சள் பூக்களை கொண்டது. இது மர வகையை சேர்ந்தது. சாதிக்காய் சிறிய கோழி முட்டை அளவில் இருக்கும். இதன் சுவை துவர்ப்பு, கார்ப்பு. இது வீரியத்தை உண்டாக்கி வாசனையை பெருக்கி காமத்தை பெருக்கும். உடலுக்கு நல்ல உரத்தினை உண்டாக்கும். சூட்டை தணித்து ஆண்மையை அதிகரிக்கும். ஆண்மை குறைவு உள்ளவர்கள் சாதிக்காய் பொடியை  அரை தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி அதிகரிக்கும்.

திண்டுக்கல் செல்லம் மருத்துவமனை டாக்டர் கோகுலகுமார்:- சாதிக்காய் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடியது. அதிக விந்தணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டது.  விறைப்பு தன்மையை உண்டாக்கி தாம்பத்யத்தை அதிக நேரம் நீட்டிக்க கூடியது. நரம்பு தளர்ச்சியை போக்கி ஒரு புதிய சக்தியை கொடுக்ககூடியது. விந்தணுக்களின் எண்ணிக்கையை சாதிக்காய் அதிகரிக்கும். இதனை லேகியமாக சாப்பிட்டு வந்தால் புதிய தெம்பு கிடைக்கும்.

தமிழ்நாடு சித்தமருத்துவ மைய டாக்டர் முகமது மாலிக்:-  சாதிக்காய் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். திரவம் போல் இருக்கும் விந்துவை கெட்டியாக உருவாக்கும் தன்மை சாதிக்காய்க்கு உண்டு. பொதுவாக டிரைவர்கள் எப்போதும் வாகனங்கள் ஓட்டியபடி இருப்பதால் உடலில் சூடு அதிகம் இருக்கும். இதனால் விந்தணுக்கள் அவர்களை அறியாமல் வெளியேறிடும்.

எனவே சாதிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சியை தந்து விந்து கெட்டியாக இருக்கும். இதனை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். ஒரு மணமூட்டி காய்க்கு இப்படி ஓராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமையாக புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் அதனை எந்தவிதத்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமைதான்