| வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 10:23.48 மு.ப GMT ] |
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். |
Monday, 26 September 2011
வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்
Thursday, 22 September 2011
சுரைக்காயின் மருத்துவ குணங்கள்
| சுரைக்காயின் மருத்துவ குணங்கள் |
| [ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 10:26.42 மு.ப GMT ] |
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர் செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம். சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும். சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. உடல் சூடு நீங்க: வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது. சிறுநீர் பெருக: மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து. பித்தத்தைக் குறைக்க: உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும், உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலா |
Wednesday, 21 September 2011
தினமும் இரண்டு கப் டீ குடித்தால் பக்கவாத நோய் வராது: ஆய்வில் தகவல்
| தினமும் இரண்டு கப் டீ குடித்தால் பக்கவாத நோய் வராது: ஆய்வில் தகவல் |
| [ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 09:02.28 மு.ப GMT ] |
அப்போது தினமும் 2 கப் காபி குடிப்பவர்களுக்கு 14 சதவீதம் பக்கவாத நோய் பாதிப்பு குறைய வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் 3 முதல் 4 கப் காபி குடிப்பவர்களுக்கு 17 சதவீதம், 6 கப் காபி குடிப்பவர்களுக்கு 7 சதவீதமும் பக்கவாத நோய் பாதிப்பு குறையும் என்றும் கண்டறிந்துள்ளனர். காபி குடிப்பதால் மூளையில் ரத்த உறைவு குறைந்து பக்கவாத நோய் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். |
Sunday, 28 August 2011
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
| கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:55.55 பி.ப GMT ] |
ஆனால் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. கறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும் கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. கறிவேப்பிலையில் வைட்டமின் பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடி பொடியாக ஆக்கி கஷாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு, புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல், மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராக மாறும். உடல் புத்துணர்வு பெறும். கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ இளநரை மாறும். ஒரு லிட்டர் எண்ணெயில் பத்து கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு சத்து நீங்கும். கறிவேப்பிலை குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். கண் பார்வையை தெளிவடைய செய்யும். இரத்தத்தை சுத்தம் செய்யும். மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும். |
| முகப்பு |
Wednesday, 24 August 2011
உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
| உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள் |
| [ சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2011, 02:50.43 பி.ப GMT ] |
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள். இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும். இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும். சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம். உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது. உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும். |
Sunday, 21 August 2011
பாஸ்மதி ரைஸ் சூ
பாஸ்மதி ரைஸ் சூப்
தேவையான பொருட்கள்
காய்கறிக் கலவை - 1 கப்
பாஸ்மதி அரிசி - 11/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகு, சீரகபொடி - 2 டீஸ்பூன்
மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை
காய்கறிகளை பொடியாக நறுக்குங்கள். பூண்டுப் பல்லைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய பூண்டுப் பல்லைப் போட்டு வதக்குங்கள். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அதனுடன் பாஸ்மதி அரிசி மற்றும் காய்கறிக் கலவையைச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீரை சேருங்கள். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 2 பொடிகளை கொதிக்கும் சூப்பில் போடுங்கள். 10 நிமிடம் நன்கு வேக விடவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சேர்த்துப் பரிமாறுங்கள்.
பாஸ்மதி ரைஸ் சூப்
தேவையான பொருட்கள்
காய்கறிக் கலவை - 1 கப்பாஸ்மதி அரிசி - 11/2 டேபிள்ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்புதினா, கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு - சுவைக்கேற்பஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்பூண்டு - 4 பல்மிளகு, சீரகபொடி - 2 டீஸ்பூன்மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை
காய்கறிகளை பொடியாக நறுக்குங்கள். பூண்டுப் பல்லைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய பூண்டுப் பல்லைப் போட்டு வதக்குங்கள். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அதனுடன் பாஸ்மதி அரிசி மற்றும் காய்கறிக் கலவையைச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீரை சேருங்கள். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 2 பொடிகளை கொதிக்கும் சூப்பில் போடுங்கள். 10 நிமிடம் நன்கு வேக விடவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சேர்த்துப் பரிமாறுங்கள்.
தேவையான பொருட்கள்
காய்கறிக் கலவை - 1 கப்பாஸ்மதி அரிசி - 11/2 டேபிள்ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்புதினா, கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு - சுவைக்கேற்பஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்பூண்டு - 4 பல்மிளகு, சீரகபொடி - 2 டீஸ்பூன்மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை
காய்கறிகளை பொடியாக நறுக்குங்கள். பூண்டுப் பல்லைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய பூண்டுப் பல்லைப் போட்டு வதக்குங்கள். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அதனுடன் பாஸ்மதி அரிசி மற்றும் காய்கறிக் கலவையைச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீரை சேருங்கள். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 2 பொடிகளை கொதிக்கும் சூப்பில் போடுங்கள். 10 நிமிடம் நன்கு வேக விடவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சேர்த்துப் பரிமாறுங்கள்.
Related posts:
பீன்ஸ் சூப்
பீன்ஸ் சூப்
தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 100 கிராம்
தக்காளி - 2
தண்ணீர் - 150 மி.லி
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
பெரிய வெங்காயம் - 1
கார்ன் ப்ளார் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை
பீன்ஸ், காரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடாகியதும் வெண்ணெய் விட்டு, நறுக்கிய பீன்ஸ், காரட் வெங்காயத்தை மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். கார்ன் ப்ளார் தவிர எல்லாப் பொருட்களையும் சேர்த்து நீர் விட்டு அரை மணி நேரம் அடுப்பில் வேக வைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரில் பால் அல்லது தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் உள்ள சூப்போடு சேர்க்கவும். சூப் ஒரளவு கெட்டியானவுடன் இறக்கிப் பரிமாறவும்.
Related posts:
Subscribe to:
Posts (Atom)