| அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 07 செப்ரெம்பர் 2012, 01:27.08 பி.ப GMT ] |
அலுவலக வேலையால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இதுபற்றி ஆய்வுக்குழு தலைவர் கரின் க்ரிபித்ஸ் கூறுகையில், அரசு அலுவலக ஊழியர்கள் 1000 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. சராசரியாக தினமும் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கணனி பணி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் கழுத்து வலி இருப்பதாகவும், தோள்பட்டை வலி இருப்பதாக 75 சதவிகித பேரும், முதுகு வலி இருப்பதாக 70 சதவிகித பேரும் கூறியுள்ளனர்.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று 1980ஆம் ஆண்டுகளில் இருந்தே மருத்துவ ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன.
இதையடுத்து ஊழியர்கள் நின்றபடி, உட்கார்ந்தபடி, சோபாவில் சாய்ந்தபடி வேலை பார்க்கும் வசதிகளை சில முன்னணி நிறுவனங்கள் அமல்படுத்தின.
அலுவலகங்களில் வீடியோகேம், ஒர்க்ஸ்டேஷன் போல கணனி சீட்களை மாற்றி அமைத்தனர். இதன் பிறகு ஊழியர்களின் கழுத்து, முதுகு வலிகள் ஓரளவு குறைந்தன. ஆனாலும் வலி பிரச்னைகள் முழுவதுமாக தீரவில்லை.
ஆண்டுகள் ஆக ஆக, இந்த பிரச்னை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எல்லா வேலைக்கும் இடம் விட்டு நகர வேண்டி இருந்தது. போன், கைபேசி, கணனி, இணைய வசதிகள் வந்த பிறகு நகர்தல் குறைந்து வருகிறது.
உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலைகளும் முடிகின்றன. மீட்டிங்கூட கான்பிரன்ஸ் கால் அல்லது வீடியோ கான்பரன்சில் முடித்து விடுகின்றனர். அதிக நேரம் உட்கார்வதால் ஏற்படும் பாதிப்புகளை ‘சேர் டிசீஸ்’ (நாற்காலி நோய்கள்) என்கிறது மருத்துவ உலகம்.
நாற்காலியை மாற்றுவதால், தரமான நாற்காலி போட்டுக் கொள்வதால் இப்பிரச்னை தீராது. வெகு நேரம் உட்கார்வதை தவிர்ப்பது அவசியம்.
இல்லாவிட்டால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. கணனி முன்பு அதிக நேரம் உட்காரும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள், மூத்த அதிகாரிகள் என்றால் நோய் இன்னும் கடுமையாக தாக்கும்.
|
Friday, 7 September 2012
அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல்
முகப் பொலிவிற்கு தேங்காய்
| முகப் பொலிவிற்கு தேங்காய் |
| [ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 02:18.33 மு.ப GMT ] |
அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன் உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க
* ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, முகம், கை மற்றும் கால்களுக்கு 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கரப். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் சற்று கூடும்.
* மற்றொரு முறை தேங்காய் தண்ணீரை வைத்து செய்வது. அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் நீர் மற்றும் ஏதேனும் பருப்பு பேஸ்ட் எடுத்து கலந்து கொண்டு, சருமத்திற்கு 1-2 நிமிடம் தேய்த்து, பின்னர் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, அழகும் அதிகரிக்கும்.
* தேங்காயை சிறிது ஆப்ரிக்காட் பழத்துடன் அரைத்து, முகத்திற்கு ஃபேசியல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சற்று இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை தரும்.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க
* தேங்காய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த மாஸ்சுரைசர். தினமும் படுக்கும் முன் சிறிது தேங்காய் நீரை சருமத்திற்கு தடவி, பின்னர் படுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து புள்ளிகளும் நீங்கி, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும்.
* தேங்காய் நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, பின் சருமம் முழுவதும் தடவி, ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவதோடு, பளபளப்பாக மின்னவும் செய்யும்.
* தினமும் குளித்த பின்னர், தேங்காய் பாலை வைத்து முகத்தினை கழுவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஆகவே முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, சற்று சருமத்தின் நிறம் அதிகரித்தும் காணப்படும்.
முகப்பரு நீங்க
* முகப்பரு விரைவில் போவதற்கு, ஈஸியான வழி இருக்கிறது. அதற்கு தொடர்ந்து இரவில் படுக்கும் முன் தேங்காய் நீரை முகத்திற்கு தடவி பிறகு தூங்க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்தால், முகப்பரு நீங்கி சருமம் மென்மையாகவும், சருமத்துளைகள் நீங்கியும் காணப்படும்.
* இல்லையென்றால் தேங்காயின் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போன்று, வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
|
இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்
| இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள் |
| [ வெள்ளிக்கிழமை, 07 செப்ரெம்பர் 2012, 02:41.46 மு.ப GMT ] |
அதாவது அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பது, அவற்றை உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணாமல், கண்ட நேரத்தில் உண்பது என்பன.
ஆகவே இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க, உணவுகளில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக இவற்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, இந்த உணவுகளையும் தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
ஒரு சில ஆய்வில் டார்க் சொக்லெட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
முக்கியமான மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு தான். ஏன் ஆலிவ் ஆயில் கூட இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.
ஆனால் அவற்றை அதிகமாக உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும்.
நட்ஸ்: தினமும் உணவில் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். அதிலும் வேர்க்கடலையை சற்று வறுத்து, சிறிது உப்பை சேர்த்து சாப்பிடலாம். இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
ஏனெனில் வேர்க்கடலையில் ஊட்டச்சத்துக்கள், செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு துணையாக உள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகள்: எப்போதும் சாப்பிடும் போதும் ஒரு கப் பழங்களை சாப்பிட்டு, பின் உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி(ஆன்டி-ஆக்ஸிடன்ட்) மற்றும் பைட்டேநியூட்ரியண்ட்ஸ் இருக்கிறது. அவை உடலில் ஏற்படும் கிருமிகளை எதிர்த்து போரிட சிறந்தது.
நார்ச்சத்து உணவுகள்: உண்ணும் உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உணவுகளான சிட்ரஸ் பழங்கள், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பேரிக்காய், முட்டைக்கோஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
அதிலும் ஓட்ஸ் மற்றும் பார்லியில் பீட்டா-குளுக்கான் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.
ஒமேகா-3 உணவுகள்: ஒமேகா-3 உள்ள உணவுகளான சாலமன், டூனா, வால் நட்ஸ் மற்றும் ஆளிவிதை போன்றவற்றை தினமும் சிறிது உடலில் சேர்க்க வேண்டும். வேண்டுமென்றால் இந்த ஒமேகா-3 சத்தை க்ரில் காப்ஸ்யூலின்(krill capsule) மூலமும் பெறலாம்.
டீ: தினமும் இரண்டு முதல் மூன்று கப் கிரீன் அல்லது பிளாக் டீயை குடிக்க வேண்டும்.
டார்க் சொக்லேட்: சொக்லேட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆகவே அதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் பின்னர் அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும்.
ஆலிவ் ஆயில்: தினமும் உடலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்க வேண்டும் ஏனெனில் ஆலிவ் எண்ணெயில் செறிவூட்டப்படாத கொழுப்புக்கள், வைட்டமின் ஈ, பாலிஃபீனால் போன்றவை இருக்கிறது. இதனால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாகிறது.
|
Sunday, 2 September 2012
என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள்
| என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, 02:05.38 மு.ப GMT ] |
இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் அத்தகைய அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.
மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் டயட் காரணமாகவும், இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது.
ஆகவே என்ன தான் ஆரோக்கியமான உணவுகளான பிராக்கோலி, முட்டைக் கோஸ், ஓட்ஸ் மற்றும் பீச் போன்றவற்றை உணவில் சேர்த்தாலும், குறிப்பிட்ட அளவு ஆரோக்கிய பானங்களையும் டயட்டில் சேர்க்க வேண்டும்.
ஏனெனில் டயட்டில் இருக்கும் போது நீர்ம உணவுகளை அதிகம் சேர்த்தால், எடை கூடாமல் நன்கு பிட்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இளமைத் தோற்றமும் நீடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கிய பானங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை குறைப்பதோடு, இளமையோடும் காணலாம்.
தண்ணீர்: உடலில் சரியான அளவு தண்ணீர் சத்தானது இருக்க வேண்டும். எந்த நோய்கள் உடலைத் தாக்கினாலும் மருத்துவரை அணுகும் போது, அவர்கள் கூறுவது நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது தான்.
ஏனெனில் தண்ணீர் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பசையை தந்து இளமையோடு வைக்கிறது. ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீரை பருகினாலே உடல் வலுவாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.
கிரீன் டீ: இது ஒரு சிறந்த ஆரோக்கியமான பானங்களில் ஒன்று. இதனால் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, உடலுக்கும் தான் நல்லது.
டயட்டில் இருப்போர்கள் அனைவரையும் பார்த்தால், தினமும் 2-4 கப் கிரீன் டீ குடிக்கின்றனர். ஏனெனில் அவை உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.
ஏனென்றால் கிரீன் டீயில் சருமத்திற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பொருளான பாலிஃபீனால் மற்றும் EGCG (ஆன்டி-ஆக்ஸிடன்ட்) இருக்கிறது. ஆகவே கூந்தல் அடர்த்தியாக வளர, சரும சுருக்கங்கள் குறைய, உடல் நல்ல பிட்டாக இருக்க, தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்தால் போதும்.
தக்காளி ஜூஸ்: தக்காளியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. அதாவது லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் முதுமை தோற்றம் வராமல் தடுப்பதோடு, சருமம் நன்கு அழகாக எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்க உதவும்.
தக்காளியை அப்படியே சாப்பிடப்பிடிக்காதவர்கள் அதனை ஜூஸ் செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும். இதனால் உடலில் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்வதோடு, குடல்களும் நன்கு வேலை செய்யும்.
இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் எளிதாக வெளியேறும் மற்றும் சருமமும் அழகாக இருப்பதோடு, சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.
கொக்கோ: குறைவான அளவு காப்ஃபைன் பருகினால், இதயத்திற்கு நல்லது. ஆனால் ஒரு கப் சூடான கொக்கோவைப் பருகினால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் அழகாகவும் இருக்கும்.
மேலும் நிறைய ஆராய்ச்சிகள் கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் அது இதயத்திற்கு நல்லது என்று கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் கார்னல் பல்கலைகழத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காபி, ரெட் ஒயின், கிரீன் டீ போன்றவற்றை விட கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூடான கொக்கோ பிடிக்காதவர்கள், கொக்கோவை மில்க் ஷேக் போல் செய்தும் சாப்பிடலாம்.
ரெட் ஒயின்: ஒயின் ஆரோக்கிய பானம் என்று சொன்னதும் உடனே, ஒயினை வாங்கி ஃபுல்லாக குடித்துவிட வேண்டாம். ஒயினில் ரெட் ஒயின் மிகுந்த பலன்களைக் கொண்டுள்ளது.
இந்த ரெட் ஒயினை குறைந்த அளவு சாப்பிட்டால் இதயத்திற்கு எந்த நோயும் வராமல் தடுப்பதோடு, உடலும் இளமையோடு அழகாக காணப்படும்.
ஏனெனில் இந்த பானத்தில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள் தான் இளமைத் தோற்றத்தை தருவதோடு வாழ்நாளையும் அதிகரிக்கிறது. ஆகவே இந்த ரெட் ஒயினை இரவில் படுக்கும் முன் ஒரு சிறிய டம்ளர் மட்டும் குடித்து வந்தால், உடல் நன்கு பிட்டாக, பார்க்க அதீத அழகோடு காணப்படுவீர்கள்.
|
Monday, 20 August 2012
சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு
| சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 02:29.49 பி.ப GMT ] |
இதற்காக சிறுநீரக நோயாளிகள் சிலருக்கு டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக, மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
முடிவில், மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், இறப்பு எண்ணிக்கையையும் குறைப்பது தெரியவந்தது.
ஏனெனில் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை, மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டது.
இருப்பினும் இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்து பார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்
| அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 02:44.54 மு.ப GMT ] |
அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.
அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலேனோர் மாறிவருகின்றனர்.
டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கி விட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது.
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.
இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.
இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.
|
Tuesday, 14 August 2012
ழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை
| ழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை |
| [ திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2012, 01:57.12 மு.ப GMT ] |
பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, வெந்தயக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெந்தயக் கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது.
வெந்தயக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தயம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.
நூறுகிராம் வெந்தயக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.
அதோடு வெந்தயக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.
வெந்தயக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.
இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தயக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.
வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தயக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
தொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தயக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம்.
வெந்தயக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால், இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.
|
Subscribe to:
Posts (Atom)