உணவில் கவனிக்கப்பட வேண்டியவைகள் |
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 08:08.05 மு.ப GMT ] |
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். 1999ம் ஆண்டில் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட(ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது. சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும். விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும். பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோகிராம் முதல் 20 மைக்ரோகிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது. |
Monday, 26 December 2011
உணவில் கவனிக்கப்பட வேண்டியவைகள்
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 02:40.23 பி.ப GMT ] |
பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும். பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும். பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும். பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும் |
மருத்துவ குறிப்புகள் |
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 01:37.11 பி.ப GMT ] |
காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம். நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் - இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும். பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். |
ஆரோக்கியமான உணவு முறைகள்
ஆரோக்கியமான உணவு முறைகள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 02:30.48 பி.ப GMT ] |
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: 1. தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். 2. எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். 3. வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும். 4. இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும். 5. உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது. 6. மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும். 7. அவ்வப்போது பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான். 8. புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். பழங்கள் சாப்பிடும் முறை: 1. காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். 2. சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். 3. உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும். 4. பழங்களை தனியாக சாப்பிடாமல் அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு. 5. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக் |
Wednesday, 21 December 2011
பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரையும்: விஞ்ஞானிகள் தகவல்
பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரையும்: விஞ்ஞானிகள் தகவல் |
[ புதன்கிழமை, 21 டிசெம்பர் 2011, 03:06.06 பி.ப GMT ] |
பீஃப்(Beef) சாப்பிடுவதால் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு கரையும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பீஃப் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர் பென்னி க்ரிஸ் எதர்டன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வழக்கமான உணவுடன் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்துள்ள பீஃப் கொடுக்கப்பட்டது. 4 வாரங்களுக்கு பிறகு அவர்களது கொழுப்பு அளவு 10 சதவிகிதம் குறைந்து இருந்தது. இதன்மூலம் தினமும் 110 கிராம் முதல் 150 கிராம் வரை பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரைகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பீஃப்பில் உடலுக்கு தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. மிதமாக எடுத்துக் கொள்வதால் இதயமும் வலுப்பெறுகிறது. இதய நோய்கள் வராமலும் தடுக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். |
இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்
|
பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்
பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் |
[ புதன்கிழமை, 21 டிசெம்பர் 2011, 04:58.34 பி.ப GMT ] |
பப்பாளி பழத்தின் தாவரவியல் பெயர் காரிசிகா பாபாயா. இதன் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது. தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. பப்பாளியின் காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற இரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. |
Friday, 16 December 2011
துளசியின் பயன்கள்
துளசியின் பயன்கள்
First Published : 11 Dec 2011 01:11:00 PM IST
* துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
* நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.
* கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.
* துளிசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் பல நாட்களாக இருக்கும் படை, சொறி, சிரங்குகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
* சிறுநீர்க்கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுகிற பிரச்னையும் நிவர்த்தியாகும்.
* துளசிக்குக் காய்சலைத் தடுக்கக்கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். உடலில் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக்கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.
* உடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி.
* எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.
* துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் பொடுகுத் தொல்லை நீங்கும்.
* துளசி இலையை இடித்துப் பிழிந்து அந்தச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
* வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
* வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
* துளசி இலை ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பலநோய்களிலிருந்து காக்கிறது.
* சுத்தமான மண்பானைத் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
* நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.
* கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.
* துளிசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் பல நாட்களாக இருக்கும் படை, சொறி, சிரங்குகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
* சிறுநீர்க்கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுகிற பிரச்னையும் நிவர்த்தியாகும்.
* துளசிக்குக் காய்சலைத் தடுக்கக்கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். உடலில் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக்கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.
* உடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி.
* எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.
* துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் பொடுகுத் தொல்லை நீங்கும்.
* துளசி இலையை இடித்துப் பிழிந்து அந்தச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
* வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
* வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
* துளசி இலை ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பலநோய்களிலிருந்து காக்கிறது.
* சுத்தமான மண்பானைத் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Subscribe to:
Posts (Atom)