Saturday 14 April 2012

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு


முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு
[ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 04:11.32 பி.ப GMT ]
எல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது.
இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.
சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்து விடுகிறது.
குண்டான மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது குண்டான மனிதர்களை மேலும் குண்டாக்கி விடும்.

வெயில் காலத்திற்கான டிப்ஸ்



சுகாதார செய்தி
வெயில் காலத்திற்கான டிப்ஸ்
[ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 02:47.23 மு.ப GMT ]
வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர் தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே நல்லது.
இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.
வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.
டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.
உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ‘ஹாய்’ சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.
உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.
இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.(இரும்புச்சத்தும் கூடும்