Sunday 28 August 2011

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்


கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:55.55 பி.ப GMT ]
கொத்துமல்லி, புதினா போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம்.
ஆனால் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. கறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும் கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடி பொடியாக ஆக்கி கஷாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம்.
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு, புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல், மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராக மாறும். உடல் புத்துணர்வு பெறும்.
கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ இளநரை மாறும்.
ஒரு லிட்டர் எண்ணெயில் பத்து கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு சத்து நீங்கும். கறிவேப்பிலை குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.
கண் பார்வையை தெளிவடைய செய்யும். இரத்தத்தை சுத்தம் செய்யும். மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும்.

Wednesday 24 August 2011

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்


உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
[ சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2011, 02:50.43 பி.ப GMT ]
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.
உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.
குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

Sunday 21 August 2011

பாஸ்மதி ரைஸ் சூ


பாஸ்மதி ரைஸ் சூப்

Post image for பாஸ்மதி ரைஸ் சூப்
 
தேவையான பொருட்கள்
காய்கறிக் கலவை - 1 கப்
பாஸ்மதி அரிசி - 11/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகு, சீரகபொடி - 2 டீஸ்பூன்
மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை
காய்கறிகளை பொடியாக நறுக்குங்கள். பூண்டுப் பல்லைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய பூண்டுப் பல்லைப் போட்டு வதக்குங்கள். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அதனுடன் பாஸ்மதி அரிசி மற்றும் காய்கறிக் கலவையைச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீரை சேருங்கள். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 2 பொடிகளை கொதிக்கும் சூப்பில் போடுங்கள். 10 நிமிடம் நன்கு வேக விடவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சேர்த்துப் பரிமாறுங்கள்.
பாஸ்மதி ரைஸ் சூப்
தேவையான பொருட்கள்
காய்கறிக் கலவை - 1 கப்பாஸ்மதி அரிசி - 11/2 டேபிள்ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்புதினா, கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு - சுவைக்கேற்பஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்பூண்டு - 4 பல்மிளகு, சீரகபொடி - 2 டீஸ்பூன்மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை
காய்கறிகளை பொடியாக நறுக்குங்கள். பூண்டுப் பல்லைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய பூண்டுப் பல்லைப் போட்டு வதக்குங்கள். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அதனுடன் பாஸ்மதி அரிசி மற்றும் காய்கறிக் கலவையைச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீரை சேருங்கள். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 2 பொடிகளை கொதிக்கும் சூப்பில் போடுங்கள். 10 நிமிடம் நன்கு வேக விடவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சேர்த்துப் பரிமாறுங்கள்.

Related posts:

பீன்ஸ் சூப்


பீன்ஸ் சூப்

Post image for பீன்ஸ் சூப்
 
தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 100 கிராம்
தக்காளி - 2
தண்ணீர் - 150 மி.லி
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
பெரிய வெங்காயம் - 1
கார்ன் ப்ளார் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை
பீன்ஸ், காரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடாகியதும் வெண்ணெய் விட்டு, நறுக்கிய பீன்ஸ், காரட் வெங்காயத்தை மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். கார்ன் ப்ளார் தவிர எல்லாப் பொருட்களையும் சேர்த்து நீர் விட்டு அரை மணி நேரம் அடுப்பில் வேக வைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரில் பால் அல்லது தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் உள்ள சூப்போடு சேர்க்கவும். சூப் ஒரளவு கெட்டியானவுடன் இறக்கிப் பரிமாறவும்.

Related posts:

கேரட் சூப்


கேரட் சூப்

Post image for கேரட் சூப்
 
தேவையான பொருட்கள்
பெரிய கேரட் - 4
வெங்காயம் - 2
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கிரீம் - 2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். குக்கரில் வெண்ணெயை உருக்கி வெங்காயம், கேரட்டை சேருங்கள். 5 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீரையும் பருப்பையும் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்குங்கள். ஆற விட்டு அரைத்து, வேக வைத்த தண்ணீருடன் கலந்து வடிகட்டி, உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள். 2 நிமிடம் கொதித்ததும் இறக்கி காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறுங்கள். சூப்பின் மீது கிரீம் தூவுங்க

அகத்திக்கீரை சூப்


அகத்திக்கீரை சூப்

Post image for அகத்திக்கீரை சூப்
 
தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை - 1 கப்
கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
பால் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை கழுவிச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய்யை ஊற்றி உருக்கவும். உருக்கிய நெய்யில் மாவைக் கொட்டிக் கிளறி வறுக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து கீரையைக் கொட்டி பத்து நிமிடம வேக வைக்கவும். கீரை வெந்தவுடன் மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சூடாக்க வேண்டும். கடைசியாக பால் சேர்த்து ஒரு கொதி விட்டு பரிமாறவும்.

வேப்பம்பூ சூப்


வேப்பம்பூ சூப்

 
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ - 1 தேக்கரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
தண்ணீர் - 300 மி.லி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
செய்முறை
வேப்பம்பூவை நெய்யில் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பை நீரிலிட்டு குழைய வேகவிட்டு எடுக்க வேண்டும். பிறகு நீரில் புளியை உப்புடன் சேர்த்துக் கரைத்து, மிளகுத்தூள் போட்டு கொதிக்க விடவும். புளிக்கரைத்த கொதி நீர் பாதியளவாக வற்றியதும் அதில் பருப்பு நீரை விட்டு, அத்துடன் வேப்பம்பூ சேர்த்து கொதிக்கச் செய்ய வேண்டும். கொதித்ததும் இறக்கி விடவும். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் சிறிது கடுகும். கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்துக் கொட்டி சூப்புடன் கலக்கிச் சிறிது நேரம் வைத்திருந்து பரிமாறவும்.

Related posts:

வெள்ளரிக்காய் சூப்


வெள்ளரிக்காய் சூப்

Post image for வெள்ளரிக்காய் சூப்
 
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 300 மி.லி.
கிரீம் - 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை
வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும், பிறகு துருவிய வெள்ளரிக்காயையும் 2 நிமிடம் வதக்கவும். பின்பு கார்ன் ப்ளாரையும் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். அதன் பின்பு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், கிரீமைச் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.

Related posts:

கேரட் சூப்


கேரட் சூப்

Post image for கேரட் சூப்
 
தேவையான பொருட்கள்
பெரிய கேரட் - 4
வெங்காயம் - 2
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கிரீம் - 2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். குக்கரில் வெண்ணெயை உருக்கி வெங்காயம், கேரட்டை சேருங்கள். 5 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீரையும் பருப்பையும் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்குங்கள். ஆற விட்டு அரைத்து, வேக வைத்த தண்ணீருடன் கலந்து வடிகட்டி, உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள். 2 நிமிடம் கொதித்ததும் இறக்கி காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறுங்கள். சூப்பின் மீது கிரீம் தூவுங்கள்.
.

தூதுவளை சூப்


தூதுவளை சூப்

 
தேவையான பொருட்கள்
தூதுவளை இலை (அ) - 1 கப்
தண்டுடன்
(அ) காய்ந்த பொடி - 15 கிராம்
தண்ணீர் - 250 மி.லி
தக்காளி, வெங்காயம், காரட்,
பீன்ஸ், மல்லித்தழை,
கரிப்பிலை, புதினா, இஞ்சி,
பூண்டு, கலந்த - 1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் - சிறிது
ஒட்ஸ் மாவு - 3 டீஸ்பூன்
செய்முறை
தூதுவளையை நீரில் கலந்து சூடுபடுத்தி பிற பொருட்களைக் கலந்து பசுமை மாறும் முன் சூடுசெய்வதை நிறுத்தி சூப் தயாரிக்கவும். கடைசியில் ஒட்ஸ் மாவு கலந்து கிளரவும். சூப் கெட்டியானதும் பரிமாறவும்.

Related posts:

பீட்ரூட் சூப்


பீட்ரூட் சூப்

Post image for பீட்ரூட் சூப்
 
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய எலுமிச்சம் பழத்தோல் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
புதினா இலை - 20
கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 லிட்டர்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றபடி
செய்முறை
பீட்ரூட்டின் தோலை நன்கு சீவி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வைத்துச் சூடாக்கிய வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு 2 நிமிடம் வதக்கவும், பின்பு நறுக்கிய பீட்ரூட், தண்ணீர், நறுக்கிய எலுமிச்சம் பழத்தோல் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் எலுமிச்சம் தோலை எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்து இறக்கி வைத்து பின்பு அதில் புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Related posts:

முள்ளங்கி சூப்



Post image for முள்ளங்கி சூப்
 
தேவையான பொருட்கள்
ஒட்ஸ் - 50 கிராம்
பால் - 100 மி.லி
பச்சைப்பட்டாணி - சிறிதளவு
சிவப்பு முள்ளங்கி - 2
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
காலிப்ளவர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு - தேவையான அளவு
செய்முறை
ஓட்ஸ§டன் 2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். காய்களை நறுக்கி வெந்த ஓட்ஸ§டன் சேர்த்து மீண்டும் நன்றாக வேகவிட வேண்டும். கொஞ்சம் பால் சேர்த்து மிளகுத்தூள் உப்பு கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியாக வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

Related posts:

கறிவேப்பிலை சூப்


கறிவேப்பிலை சூப்

Post image for கறிவேப்பிலை சூப்
 
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்
தக்காளி - 1
பயத்தம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 500 மி.லி
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சம்பழச்சாறு - 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பில் தண்ணீர் ஊற்றி நன்கு குழையும்படி வேகவைக்க வேண்டும். வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய்யை விட்டு உருகியதும் வெங்காயத்தையும் பூண்டையும் போட்டு வதக்கவும். அதில் பருப்பு நீரை மட்டும் ஊற்றி, கறிவேப்பிலையையும் சேர்த்து வேகவைக்கவும், பிறகு சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு, உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

Related posts:

மணத்தக்காளி சூப்

தேவையான பொருட்கள்
மணத்தக்காளி கீரை - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யுங்கள் வெங்காயம் பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து, குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக்கலந்து பரிமாறுங்கள்.