Monday, 26 December 2011

உணவில் கவனிக்கப்பட வேண்டியவைகள்


உணவில் கவனிக்கப்பட வேண்டியவைகள்
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 08:08.05 மு.ப GMT ]
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.
இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999ம் ஆண்டில் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட(ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினசரி அளவான 50 மைக்ரோகிராம் முதல் 20 மைக்ரோகிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்


பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 02:40.23 பி.ப GMT ]
பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.
உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.
புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.
மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும்.
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.
பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்

மருத்துவ குறிப்புகள்
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 01:37.11 பி.ப GMT ]
காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.
நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் - இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.
பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.

ஆரோக்கியமான உணவு முறைகள்


ஆரோக்கியமான உணவு முறைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 02:30.48 பி.ப GMT ]
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:
1. தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
2. எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
3. வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
4. இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
5. உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
6. மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
7. அவ்வப்போது பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
8. புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
பழங்கள் சாப்பிடும் முறை:
1. காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
2. சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
3. உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
4. பழங்களை தனியாக சாப்பிடாமல் அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
5. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்

Wednesday, 21 December 2011

பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரையும்: விஞ்ஞானிகள் தகவல்


பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரையும்: விஞ்ஞானிகள் தகவல்
[ புதன்கிழமை, 21 டிசெம்பர் 2011, 03:06.06 பி.ப GMT ]
பீஃப்(Beef) சாப்பிடுவதால் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு கரையும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பீஃப் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர் பென்னி க்ரிஸ் எதர்டன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்காக எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வழக்கமான உணவுடன் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்துள்ள பீஃப் கொடுக்கப்பட்டது.
4 வாரங்களுக்கு பிறகு அவர்களது கொழுப்பு அளவு 10 சதவிகிதம் குறைந்து இருந்தது. இதன்மூலம் தினமும் 110 கிராம் முதல் 150 கிராம் வரை பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரைகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பீஃப்பில் உடலுக்கு தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. மிதமாக எடுத்துக் கொள்வதால் இதயமும் வலுப்பெறுகிறது. இதய நோய்கள் வராமலும் தடுக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்ஆராய்சி செய்தி
இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்
[ செவ்வாய்க்கிழமை, 20 டிசெம்பர் 2011, 06:02.34 மு.ப GMT ]
“தினசரி ஒரு ஆப்பிள் போதும், வைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்தது தான். எனினும் இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி இந்தியாவின் டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர்.
அவர்கள் கூறியதாவது: வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில் 0% கொழுப்பு கொண்டது வாழை.
மாறாக அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச்(ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது.
இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஆப்பிளுடன் ஒப்பிட்டால் ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள் தான் சமம்.
ஏனெனில் ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.
வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம்.

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்


பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்
[ புதன்கிழமை, 21 டிசெம்பர் 2011, 04:58.34 பி.ப GMT ]
பப்பாளி பழத்தின் தாவரவியல் பெயர் காரிசிகா பாபாயா. இதன் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
பப்பாளியின் காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற இரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.

Friday, 16 December 2011

துளசியின் பயன்கள்


துளசியின் பயன்கள்

First Published : 11 Dec 2011 01:11:00 PM IST

* துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

* நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

* கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

* துளிசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் பல நாட்களாக இருக்கும் படை, சொறி, சிரங்குகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* சிறுநீர்க்கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுகிற பிரச்னையும் நிவர்த்தியாகும்.

* துளசிக்குக் காய்சலைத் தடுக்கக்கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். உடலில் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக்கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

* உடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி.

* எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

* துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் பொடுகுத் தொல்லை நீங்கும்.

* துளசி இலையை இடித்துப் பிழிந்து அந்தச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

* வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.

* வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

* துளசி இலை ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பலநோய்களிலிருந்து காக்கிறது.

* சுத்தமான மண்பானைத் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Sunday, 13 November 2011

கொள்ளு ரசம்


கொள்ளு ரசம்PDFஅச்சிடுகமின்-அஞ்சல்
சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 14:54

kollu_rasamதேவையான பொருட்கள் :
கொள்ளு - 3 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்) (ஆய்ந்தது)
தக்காளி - 2
கொத்துமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 (அ) 3
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
மிளகுப் பொடி, உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க - கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.
 cooking
செய்முறை :
வாணலியில் 2 (அ) 3 கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். பின் கொள்ளுப் பொடியையும் பிற பொருட்களையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் தீயை குறைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து கடைசியாக கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். தாளித்து பரிமாறவும். விருந்துக்கு மட்டுமின்றி மருந்தாகவும் அமைகின்ற டூ இன் ஒன் ரசம் இது. 

முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட்


முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட்PDFஅச்சிடுகமின்-அஞ்சல்
வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011 12:01
murungai_keerai

தேவையான பொருட்கள் :
முருங்கைக் கீரை - 1 கட்டு (ஆய்ந்தது)
பொட்டுக்கடலை மாவு - 2 கப்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

 cooking
செய்முறை : 
* பொட்டுக் கடலை மாவை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை போட்டு வதக்கி மாவுடன் கலந்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
* தோசைக்கல் சூடானதும் உருண்டைகளைத் தட்டிப் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
 

Thursday, 3 November 2011

தேனின் மருத்துவ குணங்கள்


தேனின் மருத்துவ குணங்கள்
[ வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011, 01:28.57 பி.ப GMT ]
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
7. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
8. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
9. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும்.
குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

Wednesday, 2 November 2011

ண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்


ண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்
[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 07:49.41 மு.ப GMT ]
இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர் அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பதுதான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹோர்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன.
ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது.
ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது.
இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Thursday, 27 October 2011

குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு


  

   
 
மருத்துவ செய்தி
குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 07:41.09 மு.ப GMT ]
உடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு வாயிலாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகி பலர் தங்கள் உடலை பெருக்க வைக்கிறார்கள்.
உடல் உழைப்பு, உடற்பயிற்சி பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதை கண்டு கொள்ளமல் விடும் போது மலச்சிக்கலில் ஆரம்பித்து பல நோய்களை கொண்டு வந்து விடுகிறது.
அதிக எடை, குடல் இறக்கம் ஏற்படவும் முக்கிய காரணமாகிறது. குடல் இறக்கம் பிரச்னையை தீர்க்க  மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
குடல் இறக்கம் என்பது வயிற்றில் உள்ள குடல் சவ்வுப் படலம் சிறிய துவாரங்கள் வழியே வெளி வருதல் ஆகும். பொதுவாக நமது வயிற்றுப் பகுதியில் இயற்கையாக சில துவாரங்கள் உண்டு.
அவை தொப்புள், அடிவயிற்றில் இருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக் குழாய்க்கான இங்குனல் பகுதி போன்றவை. இந்த துவாரங்கள் வயிற்றின் உள் பகுதியில் இருந்து மேல் வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய்ப்பகுதியில் எலாஸ்டிக் போன்று இருக்கும். இந்த எலாஸ்டிக் விரிவடைவதால் வயிற்றில் உள்ள குடல் மற்றும் குடல் சவ்வுப் படலம் போன்றவை வெளியில் வந்து விடுகிறது.
துவக்கத்தில் அழுத்தம் வரும் போது மட்டும் வெளியில் வந்து அழுத்தம் குறைந்த உடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் தன்மை கொண்டதாக இருக்கும். அவ்வப்போது இந்தப் பிரச்னை தோன்றும். பிறகு குடல் பகுதிகள் நிரந்தரமாகத் தங்கி தொல்லை தர ஆரம்பிக்கும்.
அதுமட்டுமில்லாமல் வயிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு தையல் விலகி ஓட்டைகள் ஏற்படலாம். இந்த துவாரங்களின் வழியே குடல் வெளியில் வந்து அப்படியே தங்கிவிடும். இதனையே குடல் இறக்கம் என்கிறோம்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். பெண்களின் கர்ப்பகாலம், தொடர்ச்சியான மலச்சிக்கல், தொடர் இருமல் மற்றும் தும்மலால் அவதிப்படுபவர்கள், அதிக பாரம் தூக்குபவர்கள், வயிற்றில் அதிக அழுத்தம் கொடுப்பவர்கள், வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முறையான ஓய்வு எடுக்காதவர்கள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் போன்றவர்களுக்கு குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இவர்கள் குடல் இறக்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்பதுடன் பிரச்னையின் துவக்கத்திலேயே டாக்டரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறலாம். குடல் இறக்கத்துக்கான அறிகுறிகளை உணர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.
பாதுகாப்பு முறை: குடல் இறக்கம் பிரச்னை வராமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது உடல் எடையைக் குறைப்பது தான். அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம். மாமிச உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இருமல் மற்றும் தும்மலுக்கு முறையான சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.
குடல் இறக்கப் பிரச்னையை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடி வயிற்றில் அல்லது தொப்புள் பகுதியில் லேசான அழுத்தத்துடன் கூடிய வலி இருக்கும். திடீரென வீக்கம் ஏற்படும், அடுத்த நாள் அல்லது படுத்தால் வீக்கம் காணாமல் போய்விடும். வயிற்றுப் பகுதியில் மந்தமான வலி தொடர்ந்து தொல்லை தரும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுக வேண்டும்.
அப்போது உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றம் மற்றும் எளிய பயிற்சிகள் போதுமானதாக இருக்கும். பிரச்னை முற்றிய பின்னர் மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
குடல் இறக்கப் பிரச்னை வந்த பின்னர் வீக்கம் உள்ள இடத்தில் அழுத்தம் இருக்கும்படி பட்டையான பெல்ட் அணிய வேண்டும். கீழே உள்ள பொருட்களை நேரடியாக குனியாமல் உட்கார்ந்தபடி எடுக்க வேண்டும்.
ஸ்கிப்பிங் மற்றும் வெயிட் லிப்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யக் கூடாது. அதிக வெயிட் உள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். வந்த பின்னர் நொந்து கொள்வதை விட குடல் இறக்கம் பிரச்னை வராமல் காக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Tuesday, 25 October 2011

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.
இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.
கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.
தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம் ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.
உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத் தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை. கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இல்லையென்றே கூறலாம்.
இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 8.9, வைட்டமின் இல்லை.
கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.
1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,
2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி.
மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.
இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்

Wednesday, 19 October 2011

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்


பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
[ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 11:43.23 மு.ப GMT ]
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Wednesday, 28 September 2011

கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்


கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்
[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 10:58.53 மு.ப GMT ]
தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.
முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.
1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.
2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.
3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.
4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.
5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.
6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.
8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.
10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.
11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.
12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.
13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.
15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.
ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

Monday, 26 September 2011

டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்


டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 12:29.26 பி.ப GMT ]
டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு.
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.
சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது.
எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.
வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.
டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ”ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.
டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.
மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.
டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.
இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்,“மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.
உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.