Sunday, 22 May 2011

கைகளை குறுக்கே வைத்துக் கொண்டால் காயத்தின் வலியில் இருந்து விடுபடலாம்


கைகளை குறுக்கே வைத்துக் கொண்டால் காயத்தின் வலியில் இருந்து விடுபடலாம்
[ வெள்ளிக்கிழமை, 20 மே 2011, 07:12.30 மு.ப GMT ]
காயம்பட்ட கைகளில் பொதுவாக வலி மிக கடுமையாக இருக்கும். சொல்ல முடியாத அளவுக்கு வேதனையும் நீடிக்கும்.
இந்த தருணத்தில் வலியின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு லண்டன் பல்கலைகழக நிபுணர்கள் புதிய உபாயம் ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த உபாயத்தின்படி காயம்பட்ட கையை உடலுக்கு குறுக்கே வைத்துக் கொண்டால் காய வலி தெரியாது என அவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி தி பெய்ன் என்ற இதழிலும் அவர்கள் எழுதியுள்ளனர்.
காயம்பட்ட கைகளை எதிர் திசையில் குறுக்காக வைத்துக் கொள்ளும் போது உடலின் உணர் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் காய பாதிப்பு குறித்த தகவல்களை பெறுவதில் மூளை பெரும் குழப்பம் அடைகிறது.
இதனால் காயம்பட்ட கைளின் வலியை அதனால் நமக்கு உணர்த்த முடியாமல் போகிறது. ஆய்வாளர்கள் 4 மில்லி வினாடி வலி ஏற்படுத்தக்கூடிய லேசர் சோதனையை 20 பேரிடம் நடத்தினர். இந்த சோதனையின் போது கைகளை மாற்று திசையில் வைத்து இருந்தவர்களுக்கு வலி மிக குறைவாகவே உணரப்பட்டது.
வலியின் போது மூளை வெளிப்படுத்தும் வேகத்தை கண்டறிய இ.இ.ஜி எனப்படும் எலக்ட்ரோ செபலோ கிராபி பயன்படுத்தப்பட்டது. லண்டன் பல்கலைகழக உடலியல்துறை பேராசிரியர் டொக்டர் கியான்டோமென்சியோ தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்ட

தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்


தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்
[ சனிக்கிழமை, 21 மே 2011, 08:09.56 மு.ப GMT ]
சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக statins மருந்து வகைகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளில் காணப்படும் இரத்தக் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இரசாயனத்தை போலவே சமைக்கப்பட்ட தக்காளியும், தக்காளிச் சாறும் பயன்தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.
நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள lycopene என்ற இரசாயனமாகும். இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
அத்தோடு மாரடைப்பு, பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Lycopene என்ற இந்த இரசாயனம் பற்றி நடத்தப்பட்டுள்ள 14 சர்வதேச ஆய்வுகளை கடந்த 55 வருடங்களாக நன்கு ஆராய்ந்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலுக்கு இது இயற்கையான பாதுகாப்பை வழங்கக் கூடியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலஸ்ட்ரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு statins மருந்து வகைகளே வழங்கப்படுகின்ற

உறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்


உறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்
[ சனிக்கிழமை, 21 மே 2011, 04:07.34 பி.ப GMT ]
சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுக்க உதவி செய்கின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக்  கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது.
ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

Tuesday, 17 May 2011

இசைகளை கேட்டு ரசித்தால் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம்ஆராய்சி செய்தி
இசைகளை கேட்டு ரசித்தால் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம்
[ வெள்ளிக்கிழமை, 13 மே 2011, 01:39.51 பி.ப GMT ]
எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் யாருக்கு தான் இருக்காது. இசைக் கருவிகள் பயிற்சி பெறும் நபர்கள் இளமைத் தோற்றத்துடன் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இசைப்பயிற்சி இல்லாதவர்களை காட்டிலும் இசை பயின்ற நபர்களில் 45-65 வயதுக்கு உட்பட்டவர்கள் நல்ல நினைவுத் திறன், கேட்கும் திறன் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் நரம்பு அறிவியல் ஆய்வக இயக்குனர் நினா கிராஜ் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நீண்ட காலம் இசைப்பயிற்சி மேற்கொள்வதால் வயோதிகம் தெரிவதில்லை. நல்ல நினைவுத்திறன், தெளிவான கேட்கும் திறன் ஆகியவை ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வயதானவர்களுக்கு சத்தமான இடத்தில் கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். காது சரியாக கேட்காத நிலையில் சமூகத்தில் தனித்து விடுதல் மற்றும் மனஅழுத்த நிலைக்கும் வயதானவர்கள் ஆளாவது உண்டு.
இசைப்பயிற்சி பெற்றவர்களுக்கு நரம்புகள் வயதான காலத்திலும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. சிறிய வயதில் இருந்து மேற்கொள்ளும் தொடர் இசைப்பயிற்சி நரம்பு செயல்பாட்டு முறையை நல்ல நிலையில் வைக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வயதானவர்கள் தகவல் தொடர்பு பிரச்சனையை தவிர்க்க உதவும் இசைப்பயிற்சி குறித்த ஆய்வு ஓன்லைன் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, 11 May 2011

எப்போதும் இளமையாக இருக்க அதிகம் படியுங்கள்


எப்போதும் இளமையாக இருக்க அதிகம் படியுங்கள்
[ புதன்கிழமை, 11 மே 2011, 08:37.05 மு.ப GMT ]
கூடுதலான கல்வித் தேர்வுகளை எழுதி துடிப்புடன் இருப்பவர்கள் மிக இளமையாக இருக்கிறார்கள் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிக கல்வித் தகுதிக்காக படிக்கும் நபர்கள் தங்களது வயது ஒத்த அதிக கல்வி தகுதி இல்லாத நபர்களை காட்டிலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தேர்வுகளில் அதிக சாதனை படைக்காதவர்கள் மிக விரைவில் வயோதிக தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். கல்விச் சாதனைக்காக தொடர்ந்து படிக்கும் நபர்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதால் அவர்களது சமூக பொருளாதார நிலையில் பிற்காலத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
லண்டனின் பல்கலைகழக ஆய்வாகளர்கள் அலுவலகம் செல்லும் 450 பேரை ஆய்வு செய்ததில் இளமை குறித்த ரகசியத்தை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். உயிரி வயோதிகத்தன்மையை குரோமோசோம் கடிகாரம் நிர்ணயிக்கிறது.
கூடுதல் நேரம் அல்லது கூடுதல் கல்விச் சாதனை மேற்கொள்பவர்களின் மூளைத்திறன் மிக துடிப்புடன் செயல்படுவதால் அவர்கள் தங்களது வயதை ஒத்தவர்களுடன் ஒப்பிடும் போது மிக இளமையானவர்களாக இருக்கிறார்கள்.
இனிமேல் ஆசிரியரோ அல்லது பெற்றோரோ படிக்குமாறு அறிவுரை கூறினால் முகம் சுளிக்காமல் படிக்கத் துவங்கலாம். நீண்ட படிப்பு நீண்ட இளமையை தரும் என்பதையே இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

Tuesday, 10 May 2011

முருங்கை ஓர் இயற்கை வயாகரா


முருங்கை ஓர் இயற்கை வயாகரா

மின்னஞ்சல்அச்சிடுகPDF
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.

வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை. முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. 64 கலைகளில் பாலுறவு என்னும் காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த உன்னதக் கலையை மிருகங்கள் ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதுபோல், அனுபவிப்பதில் பயனில்லை.

மனிதனும் வயகரா மருந்துண்டு 10 நிமிடம் மிருகவெறியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் மிருகத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை. சிலை, சிற்பம், சித்திரங்களில் உள்ளது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை அனுபவிக்கும் போதுதான் மனிதனின் ஐம்பொறிகளின் உணர்வுக்கும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவைகளால் ஈர்க்கப்பட்டு, உடலுக்கும், மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச் சுவைத்து, உள்மனம் என்ற உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும், இன்பத்தையும் அடைய முடியும்.

ஆண்தன்மை அதிகரிக்க :

முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

விந்து விருத்தியாக :

முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.

காமம் பெருக :

முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும்.

வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.

பாலுறவில் பரவசமடைய :

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

வயதானோரும் வாலிப சுகம் அடைய :

முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
(நன்றி: மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)

Monday, 9 May 2011

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்


எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்
[ திங்கட்கிழமை, 09 மே 2011, 01:46.15 பி.ப GMT ]
எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.
தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

Sunday, 8 May 2011

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்


வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011, 07:32.35 மு.ப GMT ]
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.
இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.
அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

முட்டை சாப்பிட்டால்....


முட்டை சாப்பிட்டால்....
[ சனிக்கிழமை, 07 மே 2011, 10:00.29 பி.ப GMT ]
நாம் சாப்பிடும் முட்டையில் என்ன என்ன சத்துக்கள் இருக்கின்றது என்பது தெரியுமா?
அதிக அளவுல புரதம் மற்றும் கொழுப்பைக் கொண்டது முட்டை. இதன் வெள்ளைக்கரு 17கலோரியும், மஞ்சள்கரு 59 கலோரியும் கொண்டது. சமைக்கும் முறையைப் பொறுத்து, கலோரிகளின் அளவு மாறுபடும்.
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதி இருக்குது. அதுமட்டுமல்ல, தைரொய்டு ஹார்மோன் சுரக்குறதுக்குத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளோட ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பொஸ்பரஸ் போன்றவையும் முட்டையில உண்டு.
காயங்களைக் குணமாக்குறதுக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படுற துத்தநாகம் என்னும் தாதும் இதுல இருக்குது. மற்ற அசைவ உணவுகளோட ஒப்பிடும்போது, செலவு குறைவு; சீக்கிரத்துல சமைக்க முடியும் போன்ற காரணங்களும் முட்டையை அதிகமானவங்க விரும்புறதுக்கு காரணமா அமையுது.
தினந்தோறும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் கொண்ட உணவுப் பொருள் முட்டை என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.
இந்நிலையில், நாள்தோறும் ஓர் முட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு நல்லது என சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்தது.
இதை பின்பற்றி அவுஸ்திரேலியாவிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதில் எதிர்மறையான முடிவுகள் தெரியவந்தன.
அதன்படி, தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட அது அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, பெண்கள் தினமும் ஒரு முட்டை வீதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு 77 சதவீதமாக அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Friday, 6 May 2011

இதயம் காக்கும் பழக்கலவை


இதயம் காக்கும் பழக்கலவை
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 01:50.44 பி.ப GMT ]
ஆரோக்கியமான இதயத்துடன் வாழ பழ கலவைகள் உதவுகின்றன. பெர்ரி, திராட்சை, ஆப்பிள் பழங்களின் சாறுகள் கலந்த கலவையில் இதய நோய்களை தவிர்ப்பதற்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாலி பீனால் கூட்டுப் பொருள் நிறைந்த தாவரம் இதய ரத்தக் குழாய்கள் பழுதடையாமல் பாதுகாக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது என பல்வேறு ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் 13 வித பழ ரசத்தின் கலவைகள் இதய பாதுகாப்புக்கு வெகுவாக உதவுகின்றன என கூறியுள்ளனர்.
திராட்சை, ஆப்பிள், பெர்ரி, செர்ரி வகை போன்ற பழவகைகளின் கலவையை அருந்துவது இதயத்திற்கு நல்லது என பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பழக்கலவையின் 60 சதவீதத்தை திராட்சை ரசம் எடுத்துக் கொள்கிறது.
பழக்கலவை ஆய்வை மேற்கொண்ட ஸ்டாஸ் போர்க் பல்கலைகழகத்தின் தலைமை ஆய்வாளர் டொக்டர் சிரில் ஆகர் கூறுகையில்,"பழவகைக்கலவை ருசியாக இருப்பதுடன் கண்ணைக் கவரும் நிறத்துடன் இதயத்தை பாதுகாப்பதாக உள்ளது" என்றார்.
இதயத்தை பாதுகாக்கும் பழக்கலவையில் ஏசர்ரோலா 4 சதவீதம், ஆப்பிள் 10 சதவீதம், திராட்சை 63 சதவீதம், லிங்கோ பெர்ரி 5 சதவீதம், அரோனியா 4 சதவீதம், ப்ளு பெர்ரி 10 சதவீதம், ஸ்டாபெர்ரி 10 சதவீதம் என்ற கலவையில் உள்ளன. 
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 01:50.44 பி.ப GMT ]
ஆரோக்கியமான இதயத்துடன் வாழ பழ கலவைகள் உதவுகின்றன. பெர்ரி, திராட்சை, ஆப்பிள் பழங்களின் சாறுகள் கலந்த கலவையில் இதய நோய்களை தவிர்ப்பதற்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாலி பீனால் கூட்டுப் பொருள் நிறைந்த தாவரம் இதய ரத்தக் குழாய்கள் பழுதடையாமல் பாதுகாக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது என பல்வேறு ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் 13 வித பழ ரசத்தின் கலவைகள் இதய பாதுகாப்புக்கு வெகுவாக உதவுகின்றன என கூறியுள்ளனர்.
திராட்சை, ஆப்பிள், பெர்ரி, செர்ரி வகை போன்ற பழவகைகளின் கலவையை அருந்துவது இதயத்திற்கு நல்லது என பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பழக்கலவையின் 60 சதவீதத்தை திராட்சை ரசம் எடுத்துக் கொள்கிறது.
பழக்கலவை ஆய்வை மேற்கொண்ட ஸ்டாஸ் போர்க் பல்கலைகழகத்தின் தலைமை ஆய்வாளர் டொக்டர் சிரில் ஆகர் கூறுகையில்,"பழவகைக்கலவை ருசியாக இருப்பதுடன் கண்ணைக் கவரும் நிறத்துடன் இதயத்தை பாதுகாப்பதாக உள்ளது" என்றார்.
இதயத்தை பாதுகாக்கும் பழக்கலவையில் ஏசர்ரோலா 4 சதவீதம், ஆப்பிள் 10 சதவீதம், திராட்சை 63 சதவீதம், லிங்கோ பெர்ரி 5 சதவீதம், அரோனியா 4 சதவீதம், ப்ளு பெர்ரி 10 சதவீதம், ஸ்டாபெர்ரி 10 சதவீதம் என்ற கலவையில் உள்ளன. 

முதுகு வலியிலிருந்து விடுபட


முதுகு வலியிலிருந்து விடுபட
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 01:55.35 பி.ப GMT ]
தலைவலி, முதுகுவலி இரண்டுமே நம்மை பாடாய்படுத்தும் நோய்களில் முக்கியமானவை. நம்மை அறியாமலேயே இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
மருந்து மாத்திரைகள் உடனடித் தீர்வு கொடுக்குமா? இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன? தொடர் மருத்துவ சிகிச்சை தவிர்க்க முடியாததா? இப்படி மனதுக்குள் எழும் கேள்விகளால் நொந்து போவோம்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 20 சதவீதம் பேர் தொடர் முதுகுவலியால் அவதிப்படுவதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வல்லுனர்களின் அறிவுரைகள் அடங்கிய இந்த அறிக்கையில், முதுகுவலியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் சிலவும் கூறப்பட்டுள்ளன. முயன்றால் முதுகுவலியை விரட்டி விடலாம்.
ஆய்வறிக்கை தரும் அறிவுறுத்தல்கள் வருமாறு: முதலில் சரியான முறையில் உட்காருவது, படுப்பது போன்ற செய்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடு, அலுவலகம், வெளியிடங்களில் நிமிர்ந்து உட்கார வேண்டியது மிக முக்கியம். தொடர்ந்து ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து சிறிய இடைவெளியில் வாக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
அலுவலகத்தில் மேஜைக்கு ஏற்றவாறு நாற்காலியின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். களைப்பாக இருக்கும் நேரத்தில் தலையை மேஜை மீது சாய்த்து ஓய்வெடுப்பது முதுகெலும்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இத்தகைய நிலையில் ஓய்வு தவிர்க்கப்பட வேண்டும்.
சுழல் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள், சுழன்று வேலை செய்வதை தவிர்த்து எழுந்து சென்று சிறு சிறு வேலைகளை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாக முன்புறம் அல்லது பின்புறமாக சாய்வது கூடாது.
கண்கள் பாதிக்காத தூரத்தில் புத்தகத்தை வைத்து படிப்பது, எழுதுவது, தட்டச்சு செய்வது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் முன்னோக்கி குனிந்து செய்வதை தவிர்த்து முதுகுத் தண்டுவடம் தன்னிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
உடல் எடை சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முதுகுவலிக்கு எளிய தீர்வு. மணிக்கொருமுறை சில நிமிட நடைபயிற்சி முதுகுத் தண்டுவடத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்.
மேலும் முதுகுவலி ஏற்பட்ட உடன் தகுந்த மருத்துவ அறிவுரையும் சிகிச்சையும் எடுத்துக் கொள்வதன் மூலம் அதிக பாதிப்பில் இருந்து விடுபடலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை மற்றும் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Thursday, 5 May 2011

மாதுளம் பழச்சாற்றுட

2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்: மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளையின் மருத்துவ குணங்க

.
மாதுளையின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 சனவரி 2011, 04:33.51 மு.ப GMT ]
மாதுளையில் மொத்தம் மூன்று ரகம். அதில் அடர் சிவப்பு மற்றும் லேசான சிவப்பு நிறத்துடன் முத்துக்கள் போலவே காணப்படும் மாதுளை, பார்ப்பதற்கே அழகாக இருக்கும். இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன.
1. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது.
2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்: மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
3. ஆண்மை பெருக: மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.
சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
4. கடுமையான இதய வலி நிற்க: மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
5. வயிற்றுப் புண்கள் குணமாக: மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக: மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.
7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க: மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

சில வகை காய்கறிகளின் மகத்துவங்கள்


சில வகை காய்கறிகளின் மகத்துவங்கள்
[ திங்கட்கிழமை, 31 சனவரி 2011, 04:33.44 மு.ப GMT ]
கா‌ய்க‌றிக‌ளிலு‌ம், ‌கீரை வகைகள‌ிலு‌ம் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ஏராளமான ச‌த்து‌க்க‌ள் அட‌ங்‌கி‌யிரு‌ப்பது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே. அதனா‌ல்தா‌ன் எ‌ந்த மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்றாலு‌ம், அ‌திகமாக கா‌ய்க‌றியு‌ம், ‌கீரையு‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர்க‌ள்.
வெண்டைக்காய்: வெ‌ண்டை‌க்கா‌யி‌ல் ‌பி ம‌ற்று‌ம் ‌சி ‌ச‌த்து‌க்களு‌ம், உ‌யி‌ர்‌ச்ச‌த்து‌க்களு‌ம் இரு‌க்‌கி‌ன்றன. இதனை சமை‌க்கு‌ம் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும்.
உட‌‌ல் சூ‌ட்டா‌ல் அவ‌தி‌ப்படுபவ‌ர்களு‌க்கு வெ‌ண்டை‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாகு‌ம். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ம‌ட்டு‌ம் வெ‌ண்டை‌க்காயை குறைவாக உ‌‌ண்பது ந‌ல்லது.
கத்தரிக்காய்: இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றுதான். சுவை‌யி‌ல் ம‌ட்டுமே க‌த்‌தி‌ரி‌க்கா‌யி‌ல் மா‌ற்ற‌ம் உ‌ண்டு. பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம் போன்ற பிரச்சினைகள் விலகும்.
அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்து‌கிறா‌ர்க‌ள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களு‌க்கு க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் ந‌ல்லது. ‌அம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌ம் க‌த்‌தி‌ரி‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.
முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். அ‌தி‌ல்லாம‌ல் ஏ‌ற்கனவே சரும ‌வியா‌தி இரு‌ப்பவ‌ர்க‌ள் க‌த்‌தி‌ரி‌க்காயை உ‌ண்பதா‌ல் ‌வியா‌தி அ‌திக‌ரி‌க்கு‌ம். நமை‌ச்ச‌ல் உ‌ண்டாகு‌ம்.
மு‌‌ள்ள‌ங்‌கி: வே‌ர்‌ப்பகு‌தி‌யி‌‌ல் உருவாகு‌ம் கா‌ய் மு‌ள்ள‌ங்‌கியாகு‌ம். மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் ஏ ச‌த்து அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் க‌ண் பா‌ர்வை‌க்கு அ‌திக‌ம் உதவு‌கிறது. இ‌தி‌ல் சோடிய‌ம் ம‌ற்று‌ம் குளோ‌ரி‌ன் இரு‌ப்பதா‌ல் மல‌ச்‌சி‌க்கலை குண‌ப்படு‌த்து‌ம். வ‌யி‌ற்று எ‌ரி‌ச்ச‌ல், பு‌ளியே‌ப்ப‌ம் போ‌ன்ற உபாதைக‌ள் வராம‌ல் தடு‌‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் மு‌ள்ள‌ங்‌கி‌க்கு உ‌ண்டு.
‌தீ‌ப்பு‌‌ண்களு‌க்கு‌ம் மு‌ள்ள‌ங்‌கி‌ச் சாறு மரு‌ந்தாக‌ப் பய‌ன்படு‌ம். மேலு‌ம் மு‌‌ள்ள‌ங்‌கி‌யி‌‌ல் கா‌ல்‌ஷ‌ிய‌ம், மா‌ங்க‌னீ‌ஸ் கல‌‌ந்து‌ள்ளதா‌ல் பெ‌ண்களு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. அடி‌க்கடி கரு‌ச்‌சிதைவு ஏ‌ற்படுபவ‌ர்க‌ள், மு‌ள்ள‌ங்‌கி‌ச் சா‌ற்‌றி‌ல் க‌ற்‌க‌ண்டு கல‌ந்து குடி‌த்து வ‌ந்தா‌ல் கரு ‌நிலை‌க்கு‌ம்.
அவரைக்காய்: கொடி‌யி‌ல் கா‌ய்‌க்‌கு‌ம் கா‌யி‌ல் அவரை‌க்கா‌ய்‌க்கு முத‌லிட‌ம் உ‌ண்டு. இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.
புடலங்காய்: நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. மே‌லு‌ம், உடலு‌க்கு அ‌திக கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்து‌ம். சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது.
பீ‌ட்ரூ‌ட்:‌ பீ‌ட்ரூ‌ட் எ‌ன்றது‌ம் எ‌ல்லோருமே சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள், இது ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌ன்று, அது ம‌ட்டும‌ல்ல ‌பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உ‌ப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
கொத்தவரக்காய்: இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
சுரைக்காய்: இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும்.

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா?


எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா?
[ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 04:45.24 மு.ப GMT ]
இன்றைய இளைஞர்களும், நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறுநீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு எலுமிச்சை மிக சிறந்த மருந்து.
எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன. அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும் என்றால், சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy) , பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம்.
ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும் என்கிறார் ரோஜ

பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க..


பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க...
[ வியாழக்கிழமை, 03 பெப்ரவரி 2011, 12:13.43 பி.ப GMT ]
தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் எண்ணெயிலுள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.
அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ:
1. ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.
2. கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால் சொரசொரப்பு தன்மை நீங்கி தோல் மிருதுவாகும். முதல்நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரைத் தொட்டு உள்ளங்காலில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.
3. தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர பாதம் மெத்தென்று அழகாகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும் முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.
4. மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி பஞ்சு போன்று மென்மையாக்கும்.
5. உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மிளிரும்.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்


பாகற்காயின் மருத்துவ குணங்கள்
[ திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011, 01:53.53 பி.ப GMT ]
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும். 
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. 
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய்


கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய்
[ செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2011, 10:06.58 மு.ப GMT ]
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்பது இந்தியர்களின் தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது.
இவை இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு. வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும் புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடிக்கலாம்.
ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு: கலோரி 25, நார்ச்சத்து 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 மிஹி, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் 46 மில்லி கிராம். 

அதிகம் உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் வரும்


அதிகம் உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் வரும்
[ செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011, 07:12.01 மு.ப GMT ]
உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மேற்கத்திய நாடுகளில் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும்.
நினைவுத் திறனும் குறைந்து சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்து விட்டாலே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால் ஆண்டுதோறும் ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது ரத்த நாளத்தின் மீது இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும்.
இது இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம்(சிஸ்டோலிக்) மற்றொன்று இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம்(டயஸ்டோலிக்). அதாவது 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு.
139/89 என்பது உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை. 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது. வயது ஏற ஏற ரத்தக் குழாய்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன. இந்த பாதிப்பு ஏற்படும் போது சிஸ்டோலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப்படும். 60 வயதை தாண்டிய 70 சதவீதத்தினருக்கு இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்பரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை, சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத்தடை மாத்திரைகள் மற்றும் உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பிறப்பிலேயே ரத்தக் குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
ரத்த அழுத்தத்தைச் சீராக்க நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
உடல் எடை அதிகரிக்கும் போது ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும்.
எனவே இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசி

நரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்: மருத்துவத்துறையின் வளர்ச்சி


நரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்: மருத்துவத்துறையின் வளர்ச்சி
[ வியாழக்கிழமை, 03 மார்ச் 2011, 11:58.09 மு.ப GMT ]
மிகவும் சிக்கலான அறுவைச்சிகிச்சைகளின்போது நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்குக் கஷ்டமான விஷயம்.
மருத்துவர்களின் இந்தக் கஷ்டத்தைப் போக்கும்வகையில் ஓர் ஒளிரும் திரவத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டீகோ மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் குழு இதைத் தயாரித்திருக்கிறது.
இதில் முக்கியமாக, அமினோ அமிலங்கள் அடங்கிய நுண் புரதத் துணுக் குகள் இருக்கின்றன. இனிமேல், மிக நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தையோ, எலக்ட்ரானிக் வழி கண்காணிப்பையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை. அறுவைச் சிகிச்சைக்கு முன் செலுத்தப் படும் இந்தத் திரவம், நரம்புகளை ஒளிரவைத்து, அவற்றை `பளிச்’ சென்று வெளிப்படுத்தும்.
அறுவைச் சிகிச்சையின்போது தவறான நரம்பைத் தேர்ந்தெடுத்துவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் அது கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும் அல்லது உடம்பின் ஒரு பகுதியைச் செயலிழக்க வைக்கக்கூடும் என்கிறார்கள். ஆரம்பகட்டமாக, எலிகளுக்கு இந்தத் திரவத்தைச் செலுத்தி ஆய்வாளர்கள் பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, அதன் நரம்புகளுக்கும் மற்ற செல்களுக்கும் இடையே அது ஒரு தெளிவான வேறு பாட்டைக் காண்பிப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்மருத்துவ செய்தி
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்
[ வெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2011, 12:32.40 பி.ப GMT ]
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
1. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மி.லி அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இது போன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் வராது.
2. இது தவிர உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
3. வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
4. மூட்டு வலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால் வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
5. எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க சுவை கூடுவதுடன் உடல் உபாதைகளையும் போக்கும்.
6. மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் நீரிழிவு, வயிற்றுப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
7. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது


உணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்
[ திங்கட்கிழமை, 07 மார்ச் 2011, 04:34.43 மு.ப GMT ]
உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.
நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு: 
வெள்ளைப் பூண்டு: கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன.
குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க புகழ் மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட் தான்.
ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டி விடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த் தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்து விடலாம்.
பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.
இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப் பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்து விடும்

ரத்தத்தை தூய்மையாக்கும் கம்பு


ரத்தத்தை தூய்மையாக்கும் கம்பு
[ வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011, 11:22.22 மு.ப GMT ]
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது.
இது இந்தியா முழுவதும் பயிராகும் செடி வகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும்.
மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். மேலும் கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
இரத்தத்தை சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். இளநரையைப் போக்கும். அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கொழுப்பை எதிர்க்கும் உணவு: ஓட்ஸ்


கொழுப்பை எதிர்க்கும் உணவு: ஓட்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011, 09:36.28 மு.ப GMT ]
இன்றைய அவசர உலகில் கிடைத்ததை உள்ளே தள்ளி விட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக் கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர் தான் சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது. அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு தான் ஓட்ஸ்.
உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம் பெறுவது இது. நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.
ஓட்ஸில் "பீட்டா குளூகான்" என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்ச்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதிலுள்ள தனி சிறப்பு.
இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ் தான்.
உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட(220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்து விடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்


மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்
[ செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011, 08:20.18 மு.ப GMT ]
தொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்தக் குறைபாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜீன் மாதம் வெளியிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.
ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்