Thursday, 27 October 2011

குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு


  

   
 
மருத்துவ செய்தி
குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 07:41.09 மு.ப GMT ]
உடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு வாயிலாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகி பலர் தங்கள் உடலை பெருக்க வைக்கிறார்கள்.
உடல் உழைப்பு, உடற்பயிற்சி பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதை கண்டு கொள்ளமல் விடும் போது மலச்சிக்கலில் ஆரம்பித்து பல நோய்களை கொண்டு வந்து விடுகிறது.
அதிக எடை, குடல் இறக்கம் ஏற்படவும் முக்கிய காரணமாகிறது. குடல் இறக்கம் பிரச்னையை தீர்க்க  மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
குடல் இறக்கம் என்பது வயிற்றில் உள்ள குடல் சவ்வுப் படலம் சிறிய துவாரங்கள் வழியே வெளி வருதல் ஆகும். பொதுவாக நமது வயிற்றுப் பகுதியில் இயற்கையாக சில துவாரங்கள் உண்டு.
அவை தொப்புள், அடிவயிற்றில் இருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக் குழாய்க்கான இங்குனல் பகுதி போன்றவை. இந்த துவாரங்கள் வயிற்றின் உள் பகுதியில் இருந்து மேல் வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய்ப்பகுதியில் எலாஸ்டிக் போன்று இருக்கும். இந்த எலாஸ்டிக் விரிவடைவதால் வயிற்றில் உள்ள குடல் மற்றும் குடல் சவ்வுப் படலம் போன்றவை வெளியில் வந்து விடுகிறது.
துவக்கத்தில் அழுத்தம் வரும் போது மட்டும் வெளியில் வந்து அழுத்தம் குறைந்த உடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் தன்மை கொண்டதாக இருக்கும். அவ்வப்போது இந்தப் பிரச்னை தோன்றும். பிறகு குடல் பகுதிகள் நிரந்தரமாகத் தங்கி தொல்லை தர ஆரம்பிக்கும்.
அதுமட்டுமில்லாமல் வயிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு தையல் விலகி ஓட்டைகள் ஏற்படலாம். இந்த துவாரங்களின் வழியே குடல் வெளியில் வந்து அப்படியே தங்கிவிடும். இதனையே குடல் இறக்கம் என்கிறோம்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். பெண்களின் கர்ப்பகாலம், தொடர்ச்சியான மலச்சிக்கல், தொடர் இருமல் மற்றும் தும்மலால் அவதிப்படுபவர்கள், அதிக பாரம் தூக்குபவர்கள், வயிற்றில் அதிக அழுத்தம் கொடுப்பவர்கள், வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முறையான ஓய்வு எடுக்காதவர்கள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் போன்றவர்களுக்கு குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இவர்கள் குடல் இறக்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்பதுடன் பிரச்னையின் துவக்கத்திலேயே டாக்டரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறலாம். குடல் இறக்கத்துக்கான அறிகுறிகளை உணர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.
பாதுகாப்பு முறை: குடல் இறக்கம் பிரச்னை வராமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது உடல் எடையைக் குறைப்பது தான். அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம். மாமிச உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இருமல் மற்றும் தும்மலுக்கு முறையான சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.
குடல் இறக்கப் பிரச்னையை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடி வயிற்றில் அல்லது தொப்புள் பகுதியில் லேசான அழுத்தத்துடன் கூடிய வலி இருக்கும். திடீரென வீக்கம் ஏற்படும், அடுத்த நாள் அல்லது படுத்தால் வீக்கம் காணாமல் போய்விடும். வயிற்றுப் பகுதியில் மந்தமான வலி தொடர்ந்து தொல்லை தரும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுக வேண்டும்.
அப்போது உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றம் மற்றும் எளிய பயிற்சிகள் போதுமானதாக இருக்கும். பிரச்னை முற்றிய பின்னர் மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
குடல் இறக்கப் பிரச்னை வந்த பின்னர் வீக்கம் உள்ள இடத்தில் அழுத்தம் இருக்கும்படி பட்டையான பெல்ட் அணிய வேண்டும். கீழே உள்ள பொருட்களை நேரடியாக குனியாமல் உட்கார்ந்தபடி எடுக்க வேண்டும்.
ஸ்கிப்பிங் மற்றும் வெயிட் லிப்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யக் கூடாது. அதிக வெயிட் உள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். வந்த பின்னர் நொந்து கொள்வதை விட குடல் இறக்கம் பிரச்னை வராமல் காக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Tuesday, 25 October 2011

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.
இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.
கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.
தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம் ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.
உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத் தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை. கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இல்லையென்றே கூறலாம்.
இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 8.9, வைட்டமின் இல்லை.
கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.
1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,
2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி.
மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.
இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்

Wednesday, 19 October 2011

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்


பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
[ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 11:43.23 மு.ப GMT ]
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.