Tuesday, 12 February 2013

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

Friday, 1 February 2013

உடலை ஆரோக்கியமாக வைக்கும் பானங்கள்

உடலை ஆரோக்கியமாக வைக்கும் பானங்கள்
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 10:19.04 மு.ப GMT ]
உடல் ஆரோக்கியத்தில் பானங்களும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய ஜூஸில் பழங்கானாலும் சரி, காய்கறிகளானாலும் சரி இரண்டிலுமே நிறைய புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
பாகற்காய் ஜூஸ்
அனைவருக்கும் பாகற்காய் ஜூஸ் என்றாலே வெறுப்பு ஏற்படும். ஏனெனில் அது மிகுந்த கசப்புத்தன்மையைக் கொண்டது.
ஆனால் இந்த ஜூஸை குடித்தால் நீரிழிவு கட்டுப்படுவதோடு, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்துவிடும்.
ஒரு வேளை அளவுக்கு அதிகமான அளவில் கசப்பு தெரிந்தால் அதை தயாரிக்கும் போது, சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து செய்தால் கசப்புத் தன்மையை குறைக்கலாம்.
பசலைக் கீரை ஜூஸ்
இந்த கீரை ஜூஸ் டயட்டில் உள்ளோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. எனவே ஒரு டம்ளர் பசலை கீரையை கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வந்தால் உடல், சருமம், கூந்தல் மற்றும் கண்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.
மாங்காய் ஜூஸ்
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் ஆரம்பமாகும். மாங்காயை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படாமல் சூரியக்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்காமல் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
உடல் எடை மற்றும் அழகான சருமம் வேண்டுமென்பவர்கள் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பெறலாம். இதனால் உடலில் செரிமானம் சரியாக நடைபெறுவதோடு, உடலில் இருந்து கழிவுகள் அகன்றுவிடும்.
பரட்டை கீரை
இந்த கீரையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, ஈ, கே, கால்சியம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், இது உடலுக்கும் சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தருகிறது.

அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ ஆறு வழிகள்


மருத்துவ செய்தி
அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ ஆறு வழிகள்
[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013, 09:54.10 மு.ப GMT ]
எப்பேர்ப்பட்ட மனிதர்களையும் சாய்த்துவிடும் வல்லமை ஓய்வுக்கும் முதுமைக்கும் இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு மருத்துவர்கள் அளிக்கும் உறுதியான பதில்... ''இல்லை.''
அப்படி என்றால் ஓய்வையும் முதுமையையும் எப்படி எதிர்கொள்வது?
1.அதிகாரம் ஒரு சுமைபெரும்பாலானவர்கள் ஓய்வுக்குப் பின் உடைந்துபோவது பணி சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் உள்ள அதிகாரம் பறிபோவதால்தான். ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்... அதிகாரம் என்பது ஒரு சுமைதான். ஆகையால், ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த விஷயம், வேலைக்குச் செல்லும் நாட்களில், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை வேலை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆனால், ஓய்வு காலம் அதை நமக்கே நமக்கானதாக்குகிறது.
2.கட்டுப்பாடு அவசியம்!உணவு விஷயத்தில் சரிவிகிதச் சமச்சீர் உணவு சாப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அலுவலகம் செல்லும்போது அவசர அவசரமாக உணவை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடியவர்கள், ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைப்பதால் விதவிதமாக சமைக்கச் சொல்லி சாப்பிட விரும்புவார்கள். ஆனால், இந்த வயதில் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக, வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு 2225 கலோரி முதல் 2500 கலோரி வரை தேவைப்படலாம். ஆனால், வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு 1800 முதல் 2000 கலோரியே போதுமானது. அதேபோல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 1875 முதல் 2000 கலோரி வரை தேவைப்படலாம். ஓய்வுபெற்ற பிறகு 1600 முதல் 1800 கலோரி வரை (ஆண்களைவிட பெண்களுக்கு சில கூடுதல் வேலைகள் இருப்பதால்) தேவைப்படலாம்.
இரைப்பையின் வேலையைக் குறைக்க உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இனிப்பு, காரம், உப்பு, மசாலா நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால், அதற்கேற்ப உங்கள் உணவை அமைத்துக்கொள்ளுங்கள். 
3.பரிசோதனையின் பலன்கள்!பெரும்பாலான நோய்கள் வெளியில் தெரிவதற்கே அதிக நாட்கள் ஆகும். அப்படி வெளியில் தெரியாமலேயே இருந்துவிட்டுத் திடீரென ஒருநாள் வெளிப்படும்போது அதைத் தாங்குவதற்கு நமது உடலும் பொருளாதாரமும் பலமாக இருக்காது. எனவே, வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. என்னென்ன நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எந்தெந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியேத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றபோல் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.
4.மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்!சிலருக்குப் பல வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ அல்லது இரண்டுமோ இருக்கலாம். தொடர்ச்சியான இந்தப் பழக்கங்களினால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த வயதிலும் அவற்றைத் தொடர்ந்துகொண்டிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகி, குணப்படுத்த முடியாதபடி பல சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.
5.இயற்கையே, ரிலாக்ஸ் மீ!மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், இது மற்றவர்களைவிடவும் முதிர் வயதினருக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.
6.நிம்மதி தரும் நிதி!முதுமைக் காலத்தை நிம்மதியுடன் கழிக்கப் பொருளாதாரமும் காரணமாக அமைகிறது. எனவே, பணியில் இருக்கும்போதே ஓய்வு காலத்துக்கு என தனியாகச் சேமித்து வையுங்கள். இதனால், 'அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியத் தேவையில்லை’ என்கிற தன்னம்பிக்கை கிடைக்கும். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக வீட்டில் உள்ளவர்களிடம் கையேந்தாமல் உங்களிடம் இருக்கும் தொகையைப் பயன்படுத்திக்கொள்

உடல் எடையை குறைக்க வேண்டுமா?

உடல் எடையை குறைக்க வேண்டுமா?
[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013, 08:33.36 மு.ப GMT ]
கேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை எடுத்து நன்றாக பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
நான்கு அவுன்சு வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். ஆமணக்கின் வேரை நன்றாக இடித்துத் தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.