Saturday, 8 September 2012

அசிடிட்டிக்கு ஏற்ற உணவுகள்

அசிடிட்டிக்கு ஏற்ற உணவுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 செப்ரெம்பர் 2012, 02:32.46 மு.ப GMT ]
அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது.
இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது.
எனவே மன அழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி செய்யலாம். மனதை லேசாக்கும் வகையில் இசையை கேட்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை போக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெய்ன் ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.
முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.
சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.
முட்டையின் வெள்ளைக்கரு அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரியான உணவாக உள்ளது. அதேபோல் மீன், சிக்கன் அதிக காரமில்லாமல் சேர்த்து சாப்பிடலாம்.
குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச் சத்து குறைவான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்றவைகளை சேர்த்து கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம். இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.
எதை சாப்பிடக்கூடாது?
அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிடலாம்.
அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம்.
காபின் நிறைந்த சொக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்கூடாது குறிப்பாக ஒயின் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

Friday, 7 September 2012

அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல்

அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 07 செப்ரெம்பர் 2012, 01:27.08 பி.ப GMT ]
அதிக நேரம் சீட்டில் உட்கார்ந்து பணிபுரியும் ஊழியர்களை சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
அலுவலக வேலையால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இதுபற்றி ஆய்வுக்குழு தலைவர் கரின் க்ரிபித்ஸ் கூறுகையில், அரசு அலுவலக ஊழியர்கள் 1000 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. சராசரியாக தினமும் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கணனி பணி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் கழுத்து வலி இருப்பதாகவும், தோள்பட்டை வலி இருப்பதாக 75 சதவிகித பேரும், முதுகு வலி இருப்பதாக 70 சதவிகித பேரும் கூறியுள்ளனர்.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று 1980ஆம் ஆண்டுகளில் இருந்தே மருத்துவ ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன.
இதையடுத்து ஊழியர்கள் நின்றபடி, உட்கார்ந்தபடி, சோபாவில் சாய்ந்தபடி வேலை பார்க்கும் வசதிகளை சில முன்னணி நிறுவனங்கள் அமல்படுத்தின.
அலுவலகங்களில் வீடியோகேம், ஒர்க்ஸ்டேஷன் போல கணனி சீட்களை மாற்றி அமைத்தனர். இதன் பிறகு ஊழியர்களின் கழுத்து, முதுகு வலிகள் ஓரளவு குறைந்தன. ஆனாலும் வலி பிரச்னைகள் முழுவதுமாக தீரவில்லை.
ஆண்டுகள் ஆக ஆக, இந்த பிரச்னை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எல்லா வேலைக்கும் இடம் விட்டு நகர வேண்டி இருந்தது. போன், கைபேசி, கணனி, இணைய வசதிகள் வந்த பிறகு நகர்தல் குறைந்து வருகிறது.
உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலைகளும் முடிகின்றன. மீட்டிங்கூட கான்பிரன்ஸ் கால் அல்லது வீடியோ கான்பரன்சில் முடித்து விடுகின்றனர். அதிக நேரம் உட்கார்வதால் ஏற்படும் பாதிப்புகளை ‘சேர் டிசீஸ்’ (நாற்காலி நோய்கள்) என்கிறது மருத்துவ உலகம்.
நாற்காலியை மாற்றுவதால், தரமான நாற்காலி போட்டுக் கொள்வதால் இப்பிரச்னை தீராது. வெகு நேரம் உட்கார்வதை தவிர்ப்பது அவசியம்.
இல்லாவிட்டால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. கணனி முன்பு அதிக நேரம் உட்காரும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள், மூத்த அதிகாரிகள் என்றால் நோய் இன்னும் கடுமையாக தாக்கும்.

முகப் பொலிவிற்கு தேங்காய்

முகப் பொலிவிற்கு தேங்காய்
[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 02:18.33 மு.ப GMT ]
தேங்காய் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தரவில்லை, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன் உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க
* ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, முகம், கை மற்றும் கால்களுக்கு 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கரப். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் சற்று கூடும்.
* மற்றொரு முறை தேங்காய் தண்ணீரை வைத்து செய்வது. அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் நீர் மற்றும் ஏதேனும் பருப்பு பேஸ்ட் எடுத்து கலந்து கொண்டு, சருமத்திற்கு 1-2 நிமிடம் தேய்த்து, பின்னர் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, அழகும் அதிகரிக்கும்.
* தேங்காயை சிறிது ஆப்ரிக்காட் பழத்துடன் அரைத்து, முகத்திற்கு ஃபேசியல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சற்று இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை தரும்.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க
* தேங்காய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த மாஸ்சுரைசர். தினமும் படுக்கும் முன் சிறிது தேங்காய் நீரை சருமத்திற்கு தடவி, பின்னர் படுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து புள்ளிகளும் நீங்கி, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும்.
* தேங்காய் நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, பின் சருமம் முழுவதும் தடவி, ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவதோடு, பளபளப்பாக மின்னவும் செய்யும்.
* தினமும் குளித்த பின்னர், தேங்காய் பாலை வைத்து முகத்தினை கழுவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஆகவே முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, சற்று சருமத்தின் நிறம் அதிகரித்தும் காணப்படும்.
முகப்பரு நீங்க
* முகப்பரு விரைவில் போவதற்கு, ஈஸியான வழி இருக்கிறது. அதற்கு தொடர்ந்து இரவில் படுக்கும் முன் தேங்காய் நீரை முகத்திற்கு தடவி பிறகு தூங்க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்தால், முகப்பரு நீங்கி சருமம் மென்மையாகவும், சருமத்துளைகள் நீங்கியும் காணப்படும்.
* இல்லையென்றால் தேங்காயின் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போன்று, வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்

இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்
[ வெள்ளிக்கிழமை, 07 செப்ரெம்பர் 2012, 02:41.46 மு.ப GMT ]
தற்போது நிறைய பேர் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் முக்கியமான ஒன்று முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகள்.
அதாவது அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பது, அவற்றை உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணாமல், கண்ட நேரத்தில் உண்பது என்பன.
ஆகவே இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க, உணவுகளில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக இவற்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, இந்த உணவுகளையும் தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
ஒரு சில ஆய்வில் டார்க் சொக்லெட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
முக்கியமான மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு தான். ஏன் ஆலிவ் ஆயில் கூட இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.
ஆனால் அவற்றை அதிகமாக உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும்.
நட்ஸ்: தினமும் உணவில் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். அதிலும் வேர்க்கடலையை சற்று வறுத்து, சிறிது உப்பை சேர்த்து சாப்பிடலாம். இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
ஏனெனில் வேர்க்கடலையில் ஊட்டச்சத்துக்கள், செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு துணையாக உள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகள்: எப்போதும் சாப்பிடும் போதும் ஒரு கப் பழங்களை சாப்பிட்டு, பின் உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி(ஆன்டி-ஆக்ஸிடன்ட்) மற்றும் பைட்டேநியூட்ரியண்ட்ஸ் இருக்கிறது. அவை உடலில் ஏற்படும் கிருமிகளை எதிர்த்து போரிட சிறந்தது.
நார்ச்சத்து உணவுகள்: உண்ணும் உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உணவுகளான சிட்ரஸ் பழங்கள், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பேரிக்காய், முட்டைக்கோஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
அதிலும் ஓட்ஸ் மற்றும் பார்லியில் பீட்டா-குளுக்கான் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.
ஒமேகா-3 உணவுகள்: ஒமேகா-3 உள்ள உணவுகளான சாலமன், டூனா, வால் நட்ஸ் மற்றும் ஆளிவிதை போன்றவற்றை தினமும் சிறிது உடலில் சேர்க்க வேண்டும். வேண்டுமென்றால் இந்த ஒமேகா-3 சத்தை க்ரில் காப்ஸ்யூலின்(krill capsule) மூலமும் பெறலாம்.
டீ: தினமும் இரண்டு முதல் மூன்று கப் கிரீன் அல்லது பிளாக் டீயை குடிக்க வேண்டும்.
டார்க் சொக்லேட்: சொக்லேட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆகவே அதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் பின்னர் அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும்.
ஆலிவ் ஆயில்: தினமும் உடலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்க வேண்டும் ஏனெனில் ஆலிவ் எண்ணெயில் செறிவூட்டப்படாத கொழுப்புக்கள், வைட்டமின் ஈ, பாலிஃபீனால் போன்றவை இருக்கிறது. இதனால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாகிறது.

Sunday, 2 September 2012

என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள்

என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, 02:05.38 மு.ப GMT ]
இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா? ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை.
இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் அத்தகைய அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.
மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் டயட் காரணமாகவும், இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது.
ஆகவே என்ன தான் ஆரோக்கியமான உணவுகளான பிராக்கோலி, முட்டைக் கோஸ், ஓட்ஸ் மற்றும் பீச் போன்றவற்றை உணவில் சேர்த்தாலும், குறிப்பிட்ட அளவு ஆரோக்கிய பானங்களையும் டயட்டில் சேர்க்க வேண்டும்.
ஏனெனில் டயட்டில் இருக்கும் போது நீர்ம உணவுகளை அதிகம் சேர்த்தால், எடை கூடாமல் நன்கு பிட்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இளமைத் தோற்றமும் நீடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கிய பானங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை குறைப்பதோடு, இளமையோடும் காணலாம்.
தண்ணீர்: உடலில் சரியான அளவு தண்ணீர் சத்தானது இருக்க வேண்டும். எந்த நோய்கள் உடலைத் தாக்கினாலும் மருத்துவரை அணுகும் போது, அவர்கள் கூறுவது நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது தான்.
ஏனெனில் தண்ணீர் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பசையை தந்து இளமையோடு வைக்கிறது. ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீரை பருகினாலே உடல் வலுவாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.
கிரீன் டீ: இது ஒரு சிறந்த ஆரோக்கியமான பானங்களில் ஒன்று. இதனால் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, உடலுக்கும் தான் நல்லது.
டயட்டில் இருப்போர்கள் அனைவரையும் பார்த்தால், தினமும் 2-4 கப் கிரீன் டீ குடிக்கின்றனர். ஏனெனில் அவை உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.
ஏனென்றால் கிரீன் டீயில் சருமத்திற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பொருளான பாலிஃபீனால் மற்றும் EGCG (ஆன்டி-ஆக்ஸிடன்ட்) இருக்கிறது. ஆகவே கூந்தல் அடர்த்தியாக வளர, சரும சுருக்கங்கள் குறைய, உடல் நல்ல பிட்டாக இருக்க, தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்தால் போதும்.
தக்காளி ஜூஸ்: தக்காளியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. அதாவது லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் முதுமை தோற்றம் வராமல் தடுப்பதோடு, சருமம் நன்கு அழகாக எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்க உதவும்.
தக்காளியை அப்படியே சாப்பிடப்பிடிக்காதவர்கள் அதனை ஜூஸ் செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும். இதனால் உடலில் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்வதோடு, குடல்களும் நன்கு வேலை செய்யும்.
இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் எளிதாக வெளியேறும் மற்றும் சருமமும் அழகாக இருப்பதோடு, சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.
கொக்கோ: குறைவான அளவு காப்ஃபைன் பருகினால், இதயத்திற்கு நல்லது. ஆனால் ஒரு கப் சூடான கொக்கோவைப் பருகினால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் அழகாகவும் இருக்கும்.
மேலும் நிறைய ஆராய்ச்சிகள் கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் அது இதயத்திற்கு நல்லது என்று கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் கார்னல் பல்கலைகழத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காபி, ரெட் ஒயின், கிரீன் டீ போன்றவற்றை விட கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூடான கொக்கோ பிடிக்காதவர்கள், கொக்கோவை மில்க் ஷேக் போல் செய்தும் சாப்பிடலாம்.
ரெட் ஒயின்: ஒயின் ஆரோக்கிய பானம் என்று சொன்னதும் உடனே, ஒயினை வாங்கி ஃபுல்லாக குடித்துவிட வேண்டாம். ஒயினில் ரெட் ஒயின் மிகுந்த பலன்களைக் கொண்டுள்ளது.
இந்த ரெட் ஒயினை குறைந்த அளவு சாப்பிட்டால் இதயத்திற்கு எந்த நோயும் வராமல் தடுப்பதோடு, உடலும் இளமையோடு அழகாக காணப்படும்.
ஏனெனில் இந்த பானத்தில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள் தான் இளமைத் தோற்றத்தை தருவதோடு வாழ்நாளையும் அதிகரிக்கிறது. ஆகவே இந்த ரெட் ஒயினை இரவில் படுக்கும் முன் ஒரு சிறிய டம்ளர் மட்டும் குடித்து வந்தால், உடல் நன்கு பிட்டாக, பார்க்க அதீத அழகோடு காணப்படுவீர்கள்.