Monday, 20 August 2012

சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு

சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 02:29.49 பி.ப GMT ]
சிறுநீரக நோய்களை மாதுளம் பழச்சாறு குணப்படுத்தும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்காக சிறுநீரக நோயாளிகள் சிலருக்கு டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக, மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
முடிவில், மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், இறப்பு எண்ணிக்கையையும் குறைப்பது தெரியவந்தது.
ஏனெனில் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை, மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டது.
இருப்பினும் இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்து பார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 02:44.54 மு.ப GMT ]
அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.
அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலேனோர் மாறிவருகின்றனர்.
டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கி விட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது.
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.
இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.
இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

Tuesday, 14 August 2012

ழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை

ழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை
[ திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2012, 01:57.12 மு.ப GMT ]
நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, வெந்தயக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெந்தயக் கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது.
வெந்தயக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தயம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.
நூறுகிராம் வெந்தயக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.
அதோடு வெந்தயக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.
வெந்தயக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.
இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தயக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.
வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தயக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
தொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தயக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம்.
வெந்தயக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால், இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.

இதயத்திற்கு பலத்தை தரும் பப்பாளி பழம்

இதயத்திற்கு பலத்தை தரும் பப்பாளி பழம்
[ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:07.56 மு.ப GMT ]
நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள் செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது.
அதிலும் பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர். மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.
பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும். அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாப்கார்ன்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாப்கார்ன்
[ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 01:31.27 பி.ப GMT ]
பாப்கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்கார்ன் மக்காசோளத்தினால் செய்யப்படுகிறது.
அதனால் அதன் சத்துக்கள் போய் விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும்.
தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன.
ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்கார்ன் மிகவும் சிறந்தது.
மேலும் பாப்கார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பாப்கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.
நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும்.
அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும்.
மேலும் இதனை சாப்பிடுவதால் அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.