Saturday, 15 December 2012

மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை


மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை

குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை மனிதர்களை தாக்குவதோடு மலடாகவும் மாற்றிவிடுகிறது. மலட்டுத்தன்மையை தடுக்க உணவுகளை எவ்வாறு உண்ணவேண்டும், எவற்றை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை இளைய தலைமுறையினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது தவறான நடைமுறையாகும். அன்றாடம் புதிதாக சமைத்த உணவுகளை உண்ணவேண்டும் அதுதான் ஆரோக்கியம்.
ரெடிமேட் மசாலாக்கள்
பண்டைய காலங்களில் செயற்கை நிறம், மணம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஃபாஸ்ட் புட் போன்றவை இல்லை. ஆனால் இன்றைக்கு மஞ்சள்தூள் தொடங்கி மிளாகாய்த்தூள், சாம்பார் பவுடர் என கலர் கலராய் ரெடிமேட் மசாலா உணவுப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் செயற்கை மணத்திற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கைப் பொருட்கள்தான் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த செயற்கை மசாலாத்தூளில் எடையை அதிகரிப்பதற்காக அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்க்கப்படுவதாக சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த கிழங்குமாவு கெட்டுவிடும் என்பதால் அதற்காக பிரசர்வேடிவ் சேர்க்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
சினைப்பை நீர்க்கட்டி

பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸார்டர்(பிசிஒடி) என்ற சினைப்பை நீர்க்கட்டியை கரைக்கச் செய்யும் மிகப்பெரிய மருந்து மிளகு ரசம். மிளகு, சீரகம், பூண்டு, கட்டிப்பொருங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இந்த ஓவரியன் நீர்க்கட்டிகள் தன்னால் கரையும் என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் கொள்ளுரசம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் சீராகும் என்கின்றனர் நிபுணர்கள்.
விந்து உற்பத்தி அதிகரிக்க

சின்ன வெங்காயம் சாம்பார் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். நல்லெண்ணையில் சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டாலும் ஆண்களுக்கு விந்து உஉற்பத்தி அதிகமாகும்.
திராட்சை, உலர்திராட்சைப் பழங்கள், சோயா, வால்நட், முருங்கைப் பூ போன்றவை பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கும். மலட்டுத்தன்மையை குணமாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
மண்பானை சமையல்

பண்டைய காலங்களில் வீடுகளில் மண்பாண்டங்களில் சமைத்தனர். அதனால்தான் எளிதாக ஐந்து, ஆறு குழந்தைகளை கூட பெற்று ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைக்கு சமைக்கும் பாத்திரங்களும், முறைகளும் கூட மாறிவிட்டன. இதனால்தான் விந்தணு உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது. மண்பானையில் சமைத்தால் விந்து நீர்த்துப்போவதை தடுக்கும். விந்துவை கெட்டிப்படுத்துவதோடு உற்பத்தியை அதிகமாக்கும்.

மண்பாண்டச் சமையல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும். சரியான உணவை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் உடல்குறை நீங்குவதோடு குழந்தைப் பேறு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சாதிக்காய்..!!


செக்ஸ் உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சாதிக்காய்..!!

செக்ஸ்… ஓரு நல்ல உடற்பயிற்சி. கணவனும், மனைவியும் உச்சத்தில் இருக்கும் போது இருவரது உடலிம் அனைத்து உறுப்புகளும் படுவேகமாக இயங்குகிறது. இந்த வேலை முடிந்ததும் இருவரது உடலிலும் நச்சு திரவம் வியர்வையாக வெளியேறுகிறது. எனவே கணவன்-மனைவியும் அடிக்கடி தாம்பத்யம் கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று- சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திருமணமான கணவன்-மனைவியும் ஓராண்டுக்குள் குழந்தை பேறு இல்லை என்றால் ஊரார் அந்த பெண்ணை பழி பேசுவார்கள். கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகிறது. இன்னும் ஒரு புழு பூச்சி கூட இல்லையா? என ஏளனம் பேசுவார்கள். இதற்கான காரணம் தாம்பத்யம் உறவில் திருப்தி இன்மை, ஆண் உறுப்பு விறைப்பு இல்லாதது, விரைவில் சக்தி வெளியேறுதல், இதுதான் குழந்தை பேறின்மைக்கு காரணம் என்று  மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆண்மைக்கு நல்ல மருந்தாக, செக்ஸ் இன்பத்துக்கு நல்ல விருந்தாக திண்டுக்கல்லில் செக்ஸ் காய் என்கிற சாதிக்காய் விற்பனை ஆகிறது. சமையலில் மணம் சேர்க்க நம் முன்னோர்கள் உபயோகித்த பொருட்கள் மருந்தாக நம் ஆரோக்கியத்தை காக்க கூடியவை. அந்த வகையில் சாதிக்காய் ஆண்மை விருத்தியை அதிகரித்து இன்ப நேரத்தை நீட்டிக்க வல்லது.

பொதுவாக மணம் உள்ள பொருள் என்றுமே வீரியத்தை தூண்டக்கூடியது. உதாரணமாக மல்லிகை பூ அணிந்து கன்னியர் பாதையை கடந்தாலே காளையர்களுக்கு ஒரு வீரியத்தை தூண்டுகிறது. இது போல்தான் சாதிக்காய் நறுமணத்தை தரக்கூடியது.  எனவே தான் சாதிக்காயும் ஆண்மையை தூண்டும் மருத்துவ குணம் உடையது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதிக்காய் இந்தோனேசியா, மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப்பட்டாலும் இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், பின்னர் ஐரோப்பா, மேற்கிந்திய தீவுகளிலும் சாதிக்காய் வளர்கிறது. சாதிக்காய் பற்றி சித்தமருத்துவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

சின்னாளப்பட்டி அருளகம் சித்த வைத்திய சாலை சித்த மருத்துவர் எஸ்.சிவமுருகேசன்:-

சாதிக்காய் அழகிய நறுமணம் உள்ள இலைகளையும், மஞ்சள் பூக்களை கொண்டது. இது மர வகையை சேர்ந்தது. சாதிக்காய் சிறிய கோழி முட்டை அளவில் இருக்கும். இதன் சுவை துவர்ப்பு, கார்ப்பு. இது வீரியத்தை உண்டாக்கி வாசனையை பெருக்கி காமத்தை பெருக்கும். உடலுக்கு நல்ல உரத்தினை உண்டாக்கும். சூட்டை தணித்து ஆண்மையை அதிகரிக்கும். ஆண்மை குறைவு உள்ளவர்கள் சாதிக்காய் பொடியை  அரை தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி அதிகரிக்கும்.

திண்டுக்கல் செல்லம் மருத்துவமனை டாக்டர் கோகுலகுமார்:- சாதிக்காய் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடியது. அதிக விந்தணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டது.  விறைப்பு தன்மையை உண்டாக்கி தாம்பத்யத்தை அதிக நேரம் நீட்டிக்க கூடியது. நரம்பு தளர்ச்சியை போக்கி ஒரு புதிய சக்தியை கொடுக்ககூடியது. விந்தணுக்களின் எண்ணிக்கையை சாதிக்காய் அதிகரிக்கும். இதனை லேகியமாக சாப்பிட்டு வந்தால் புதிய தெம்பு கிடைக்கும்.

தமிழ்நாடு சித்தமருத்துவ மைய டாக்டர் முகமது மாலிக்:-  சாதிக்காய் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். திரவம் போல் இருக்கும் விந்துவை கெட்டியாக உருவாக்கும் தன்மை சாதிக்காய்க்கு உண்டு. பொதுவாக டிரைவர்கள் எப்போதும் வாகனங்கள் ஓட்டியபடி இருப்பதால் உடலில் சூடு அதிகம் இருக்கும். இதனால் விந்தணுக்கள் அவர்களை அறியாமல் வெளியேறிடும்.

எனவே சாதிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சியை தந்து விந்து கெட்டியாக இருக்கும். இதனை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். ஒரு மணமூட்டி காய்க்கு இப்படி ஓராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமையாக புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் அதனை எந்தவிதத்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமைதான்

Monday, 10 December 2012

நோய் எதிர்ப்பு சக்திக்கு



மூட்டு நோய்க்கு வர்ம மருத்துவம் ......................................




கேழ்வரகு





கொழுப்பை குறைக்கும் உணவுகள்

கொழுப்பை குறைக்கும் உணவுகள்
[ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:59.09 மு.ப GMT ]
இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. இதற்கு உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதே ஆகும்.
வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன.
கருப்பு பீன்ஸ்
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும்.
இவற்றை சாப்பிட்டால் பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.
இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பேரிக்காய்
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும்.
ஏனெனில் ஆய்வு ஒன்றில் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.
வேர்க்கடலை
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும்.
ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும் அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதைகள்
கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது.
அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
வெள்ளை டீ(White Tea)
நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது.
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது.
இந்த ஆசிட் உடலில் சென்றால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும்.
ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.

Wednesday, 5 December 2012

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்
[ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 08:40.05 மு.ப GMT ]
குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள்.
இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் சாப்பிடலாம் என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
ஆரஞ்சு
குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது.
அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பசலைக் கீரை
பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
வேர்க்கடலை
வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.
கொய்யாப்பழம்
இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.
ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.
கேரட்
கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன.
மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.
கிவி
இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.
சிக்கன் சூப்
சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.