Saturday, 14 April 2012

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு


முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு
[ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 04:11.32 பி.ப GMT ]
எல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது.
இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.
சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்து விடுகிறது.
குண்டான மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது குண்டான மனிதர்களை மேலும் குண்டாக்கி விடும்.

வெயில் காலத்திற்கான டிப்ஸ்



சுகாதார செய்தி
வெயில் காலத்திற்கான டிப்ஸ்
[ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 02:47.23 மு.ப GMT ]
வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர் தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே நல்லது.
இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.
வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.
டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.
உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ‘ஹாய்’ சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.
உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.
இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.(இரும்புச்சத்தும் கூடும்

Sunday, 5 February 2012

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் உலர் திராட்சை


மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் உலர் திராட்சை
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:04.49 பி.ப GMT ]
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன.
நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும்.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
அடங்கியுள்ள சத்துக்கள்: உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
ரத்தசோகையை கட்டுப்படுத்தும்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
காமாலை நோய் குணமடையும்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.
உடல்புஷ்டிக்கு: இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.
மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையு

Tuesday, 31 January 2012

இஞ்சியின் மருத்துவ குணங்கள்


இஞ்சியின் மருத்துவ குணங்கள்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 08:34.37 மு.ப GMT ]
இஞ்சியை அனைவரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றோம். ஆனால் பல்வேறு மருத்துவ குணங்கள் இஞ்சியில் உள்ளது.
இவற்றை அறிந்து கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.
பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால் சரியாகும்.
கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில் இஞ்சியால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி பசியின்மையைப் போக்குகிறது.
கீமோதெரபி போன்ற சர்ஜரியின்போது உண்டாகும் குமட்டலை சரிசெய்கிறது.
மூட்டுவலி, சதைப்பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.
கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந்துள்ளனர்.
எனவே இஞ்சியை நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களை நாம் எதிர்க்க

குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்


குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 02:07.11 பி.ப GMT ]
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.
வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு: வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.
பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.
இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.
வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

Friday, 27 January 2012

கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்


கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 08:16.11 மு.ப GMT ]
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்.
அதுபற்றி விஞ்ஞானி இயான் ஸ்டீபன் கூறியதாவது: பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.
குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என தெரிவித்தார்.

தேங்காயின் மருத்துவ குணங்கள்


தேங்காயின் மருத்துவ குணங்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 08:45.19 மு.ப GMT ]
தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும்.
தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.
தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
தேங்காய் பால்: தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.