நோய்களை கட்டுப்படுத்தும் வாழைப்பழம் |
[ திங்கட்கிழமை, 18 யூன் 2012, 01:49.12 மு.ப GMT ] |
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி உள்ளது.
நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும், இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது.
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
காய்ச்சல் வருவது போல் உணர்ந்தால் உடனே ஒரு வாழைப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.
|
Sunday, 17 June 2012
நோய்களை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment