Monday, 20 August 2012

சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு

சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 02:29.49 பி.ப GMT ]
சிறுநீரக நோய்களை மாதுளம் பழச்சாறு குணப்படுத்தும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்காக சிறுநீரக நோயாளிகள் சிலருக்கு டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக, மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
முடிவில், மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், இறப்பு எண்ணிக்கையையும் குறைப்பது தெரியவந்தது.
ஏனெனில் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை, மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டது.
இருப்பினும் இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்து பார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment