Saturday, 15 December 2012

உடலுறவும் – ஆண்மையும்


உடலுறவும் – ஆண்மையும்

உடல் உறவின் பின்னர் உறுப்பு சுருக்கமடைந்து விடுகின்றன. இதன் பின் மறுபடியும் உறவில் ஈடுபட உறுப்பு ஆயத்தமாக அரை மணித்தியாலங்கள் நேரமெடுக்கும். சிலருக்கு இதை விட நேரமெடுக்கலாம்.ஆனால் தொடர்ந்து பல முறை உறவில் ஈடுபடுவதால் உங்கள் ஆரோக்கியம் கெட இடமுண்டு.
பாலியல் இணைப்பு என்பது ஒரு மரதன் ஓட்டப் போட்டி அல்ல. குறைந்த நேரத்திற்குள் நீண்ட தூரம் ஓடி சாதனை படைப்பது போல குறைந்த நேரத்துக்குள் பலமுறை இணைப்பில் ஈடுபட்டு சாதனை செய்ய முயன்றால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இதனின் போது உடலுறவில் ஈடுபடுவது எத்தனை முறை என்பது முக்கியமில்லை. முக்கியமானது ஈடுபடும் முறை என்ன என்பதே. நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டு உச்ச நிலையை தக்க வைத்துக் கொண்டு செயற்படுவதன் மூலம் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த முடியும்.
உங்களது ஆண்மை செயற்பாடு இதில் தான் அடங்கி உள்ளது. ஜரோப்பிய நாடுகளில் உறவு பற்றி சில புத்தகங்கள் வெளியாகின்றன. எமது நாட்டிலும் ர்த்தகங்கள் வெளிவருகின்றன. இவைகளில் படிப்பவர்களுக்கு ஒரு சிலர் சலிப்பை தரவென்று சில கற்பனை கதைகளையும் வைத்து எழுதி விடுகின்றனர்.
இவைகளில் ஒரே இரவில் பல பெண்களை திருப்திபடுத்திடும் வகையிலான கதைகளும் இடம் பெற்றிருக்கும். இவைகளை வாசிப்பவர்கள் இவைகளை உண்மை என நினைத்து தங்களும் அது போல செயற்படும் திறன் இல்லை என்று நினைத்து தமக்கு ஆண்மை குறைபாடு அல்லது ஆண்மையற்ற தன்மை உன்று மனம் தளர்ந்து விடுகின்றனர்.
இது போன்றவர் மேல் அனுதாபம் கொள்வதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது… இது போன்ற கருத்துகளை நம்பி எப்போது உங்கள் வாழ்க்கை வீணாக்கி விடாதீர்கள்.. இவ்வாறு பல முறை இளமை உங்களுக்கு எச்சரித்துள்ளது..!!
கற்பனையில் எதையும் எழுத முடியும் ஆனால் அவைகளில் வருவது போன்று நீங்கள் கற்ானை கதாபத்திரம் அல்ல. நீங்கள் ஒரு நிஜமான மனிதன். உங்கள் உடலின் சுகத்திற்கு ஒரு எல்லை இருப்பது போன்று பாலியல் செயற்பாட்டிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்டி செயற்படுவது முடியாதது. அப்படி செய்யவும் அவசியமில்லை.
சில ஆண்களுக்கு ஒரு சில குறைகள் நிகழும். ஒரு சிலருக்கு எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட்டாலும் உச்ச நிலை வெளிப்படுவது இல்லை. ஒரு முறை உறுப்பு எழுந்தால் அது இலகுவில் தளராது. இது துரதிஸ்திடமான நிலையாகும். காரணம் இப்போழுது விந்து வெளிப்படல் வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும் அது நிகழாது. தொடர்ந்து இணைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் பெண்ணுக்கு உறுப்பில் வேதனை ஏற்படும் அவள் திருப்தியான இன்பம் பெறுவதற்கு மாறாக வேதனைக்குள்ளாவாள்.
இது போன்ற ஆணை ஆண்மை நிறைந்தவன் என் நினைப்பது முட்டாள்தனம். இந்த நிலையில் இருந்து மீள இவன் கட்டாயமாக மருத்துவரின் சிகிச்சையை பெற வேண்டும். இல்லையாயின் வேறு வழி கிடையாது.
ஆகவே ஆண்மை சக்தி என்பது பெண்ணுடன் இணைவதால் நீங்கள் திருப்தி பெற்ற உங்களுடன் இணைந்த பெண்ணும், திருப்தி பெற்றிருப்பதே தவிர இணைப்பில் ஈடுபவது எத்தனை முறை என்ற கணக்கு அலல. ஆழ்ந்த சிந்தித்துப் பார்த்தால் ஆண்மை சக்தி குறைவது என்பது மனதால் நினைப்பால் ஏற்படும் ஒன்றே என்பது தெளிவாகும்…
வீணாக மனத்தை குழப்பி வாழ்கையை இழந்து விடாதீர்கள்.

1 comment:

  1. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete