Friday, 1 February 2013

உடலை ஆரோக்கியமாக வைக்கும் பானங்கள்

உடலை ஆரோக்கியமாக வைக்கும் பானங்கள்
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 10:19.04 மு.ப GMT ]
உடல் ஆரோக்கியத்தில் பானங்களும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய ஜூஸில் பழங்கானாலும் சரி, காய்கறிகளானாலும் சரி இரண்டிலுமே நிறைய புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
பாகற்காய் ஜூஸ்
அனைவருக்கும் பாகற்காய் ஜூஸ் என்றாலே வெறுப்பு ஏற்படும். ஏனெனில் அது மிகுந்த கசப்புத்தன்மையைக் கொண்டது.
ஆனால் இந்த ஜூஸை குடித்தால் நீரிழிவு கட்டுப்படுவதோடு, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்துவிடும்.
ஒரு வேளை அளவுக்கு அதிகமான அளவில் கசப்பு தெரிந்தால் அதை தயாரிக்கும் போது, சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து செய்தால் கசப்புத் தன்மையை குறைக்கலாம்.
பசலைக் கீரை ஜூஸ்
இந்த கீரை ஜூஸ் டயட்டில் உள்ளோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. எனவே ஒரு டம்ளர் பசலை கீரையை கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வந்தால் உடல், சருமம், கூந்தல் மற்றும் கண்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.
மாங்காய் ஜூஸ்
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் ஆரம்பமாகும். மாங்காயை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படாமல் சூரியக்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்காமல் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
உடல் எடை மற்றும் அழகான சருமம் வேண்டுமென்பவர்கள் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பெறலாம். இதனால் உடலில் செரிமானம் சரியாக நடைபெறுவதோடு, உடலில் இருந்து கழிவுகள் அகன்றுவிடும்.
பரட்டை கீரை
இந்த கீரையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, ஈ, கே, கால்சியம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், இது உடலுக்கும் சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தருகிறது.

No comments:

Post a Comment