Sunday, 13 November 2011

கொள்ளு ரசம்


கொள்ளு ரசம்PDFஅச்சிடுகமின்-அஞ்சல்
சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 14:54

kollu_rasamதேவையான பொருட்கள் :
கொள்ளு - 3 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்) (ஆய்ந்தது)
தக்காளி - 2
கொத்துமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 (அ) 3
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
மிளகுப் பொடி, உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க - கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.
 cooking
செய்முறை :
வாணலியில் 2 (அ) 3 கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். பின் கொள்ளுப் பொடியையும் பிற பொருட்களையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் தீயை குறைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து கடைசியாக கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். தாளித்து பரிமாறவும். விருந்துக்கு மட்டுமின்றி மருந்தாகவும் அமைகின்ற டூ இன் ஒன் ரசம் இது. 

முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட்


முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட்PDFஅச்சிடுகமின்-அஞ்சல்
வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011 12:01
murungai_keerai

தேவையான பொருட்கள் :
முருங்கைக் கீரை - 1 கட்டு (ஆய்ந்தது)
பொட்டுக்கடலை மாவு - 2 கப்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

 cooking
செய்முறை : 
* பொட்டுக் கடலை மாவை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை போட்டு வதக்கி மாவுடன் கலந்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
* தோசைக்கல் சூடானதும் உருண்டைகளைத் தட்டிப் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
 

Thursday, 3 November 2011

தேனின் மருத்துவ குணங்கள்


தேனின் மருத்துவ குணங்கள்
[ வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011, 01:28.57 பி.ப GMT ]
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
7. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
8. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
9. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும்.
குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

Wednesday, 2 November 2011

ண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்


ண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்
[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 07:49.41 மு.ப GMT ]
இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர் அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பதுதான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹோர்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன.
ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது.
ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது.
இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.