கொள்ளு ரசம் |
சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 14:54 |
தேவையான பொருட்கள் : கொள்ளு - 3 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்) (ஆய்ந்தது) தக்காளி - 2 கொத்துமல்லி - 1 டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 2 (அ) 3 எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன் மிளகுப் பொடி, உப்பு - தேவைக்கேற்ப தாளிக்க - கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை. செய்முறை : வாணலியில் 2 (அ) 3 கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். பின் கொள்ளுப் பொடியையும் பிற பொருட்களையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் தீயை குறைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து கடைசியாக கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். தாளித்து பரிமாறவும். விருந்துக்கு மட்டுமின்றி மருந்தாகவும் அமைகின்ற டூ இன் ஒன் ரசம் இது. |
No comments:
Post a Comment