முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட் |
வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011 12:01 |
தேவையான பொருட்கள் : முருங்கைக் கீரை - 1 கட்டு (ஆய்ந்தது) பொட்டுக்கடலை மாவு - 2 கப் வெங்காயம் - 3 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு * பொட்டுக் கடலை மாவை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். * வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை போட்டு வதக்கி மாவுடன் கலந்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். * தோசைக்கல் சூடானதும் உருண்டைகளைத் தட்டிப் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். |
No comments:
Post a Comment