Sunday, 2 September 2012

என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள்

என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, 02:05.38 மு.ப GMT ]
இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா? ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை.
இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் அத்தகைய அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.
மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் டயட் காரணமாகவும், இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது.
ஆகவே என்ன தான் ஆரோக்கியமான உணவுகளான பிராக்கோலி, முட்டைக் கோஸ், ஓட்ஸ் மற்றும் பீச் போன்றவற்றை உணவில் சேர்த்தாலும், குறிப்பிட்ட அளவு ஆரோக்கிய பானங்களையும் டயட்டில் சேர்க்க வேண்டும்.
ஏனெனில் டயட்டில் இருக்கும் போது நீர்ம உணவுகளை அதிகம் சேர்த்தால், எடை கூடாமல் நன்கு பிட்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இளமைத் தோற்றமும் நீடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கிய பானங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை குறைப்பதோடு, இளமையோடும் காணலாம்.
தண்ணீர்: உடலில் சரியான அளவு தண்ணீர் சத்தானது இருக்க வேண்டும். எந்த நோய்கள் உடலைத் தாக்கினாலும் மருத்துவரை அணுகும் போது, அவர்கள் கூறுவது நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது தான்.
ஏனெனில் தண்ணீர் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பசையை தந்து இளமையோடு வைக்கிறது. ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீரை பருகினாலே உடல் வலுவாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.
கிரீன் டீ: இது ஒரு சிறந்த ஆரோக்கியமான பானங்களில் ஒன்று. இதனால் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, உடலுக்கும் தான் நல்லது.
டயட்டில் இருப்போர்கள் அனைவரையும் பார்த்தால், தினமும் 2-4 கப் கிரீன் டீ குடிக்கின்றனர். ஏனெனில் அவை உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.
ஏனென்றால் கிரீன் டீயில் சருமத்திற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பொருளான பாலிஃபீனால் மற்றும் EGCG (ஆன்டி-ஆக்ஸிடன்ட்) இருக்கிறது. ஆகவே கூந்தல் அடர்த்தியாக வளர, சரும சுருக்கங்கள் குறைய, உடல் நல்ல பிட்டாக இருக்க, தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்தால் போதும்.
தக்காளி ஜூஸ்: தக்காளியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. அதாவது லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் முதுமை தோற்றம் வராமல் தடுப்பதோடு, சருமம் நன்கு அழகாக எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்க உதவும்.
தக்காளியை அப்படியே சாப்பிடப்பிடிக்காதவர்கள் அதனை ஜூஸ் செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும். இதனால் உடலில் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்வதோடு, குடல்களும் நன்கு வேலை செய்யும்.
இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் எளிதாக வெளியேறும் மற்றும் சருமமும் அழகாக இருப்பதோடு, சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.
கொக்கோ: குறைவான அளவு காப்ஃபைன் பருகினால், இதயத்திற்கு நல்லது. ஆனால் ஒரு கப் சூடான கொக்கோவைப் பருகினால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் அழகாகவும் இருக்கும்.
மேலும் நிறைய ஆராய்ச்சிகள் கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் அது இதயத்திற்கு நல்லது என்று கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் கார்னல் பல்கலைகழத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காபி, ரெட் ஒயின், கிரீன் டீ போன்றவற்றை விட கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூடான கொக்கோ பிடிக்காதவர்கள், கொக்கோவை மில்க் ஷேக் போல் செய்தும் சாப்பிடலாம்.
ரெட் ஒயின்: ஒயின் ஆரோக்கிய பானம் என்று சொன்னதும் உடனே, ஒயினை வாங்கி ஃபுல்லாக குடித்துவிட வேண்டாம். ஒயினில் ரெட் ஒயின் மிகுந்த பலன்களைக் கொண்டுள்ளது.
இந்த ரெட் ஒயினை குறைந்த அளவு சாப்பிட்டால் இதயத்திற்கு எந்த நோயும் வராமல் தடுப்பதோடு, உடலும் இளமையோடு அழகாக காணப்படும்.
ஏனெனில் இந்த பானத்தில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள் தான் இளமைத் தோற்றத்தை தருவதோடு வாழ்நாளையும் அதிகரிக்கிறது. ஆகவே இந்த ரெட் ஒயினை இரவில் படுக்கும் முன் ஒரு சிறிய டம்ளர் மட்டும் குடித்து வந்தால், உடல் நன்கு பிட்டாக, பார்க்க அதீத அழகோடு காணப்படுவீர்கள்.

No comments:

Post a Comment