சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்: ஆய்வுத் தகவல் |
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 02:03.53 பி.ப GMT ] |
![]() அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் பிளாக்ஸ்பர்க் நகரில் உள்ள வெர்ஜினியா பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பிரந்தா தவி தலைமையிலான குழுவினர் உடல் பருமனை குறைப்பதில் தண்ணீரின் பங்கு பற்றி ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினருக்கு தினமும் 3 வேளை சாப்பிடுவதற்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் வீதம் 12 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு தண்ணீர் கொடுக்காமல் சாப்பாடு கொடுக்கப்பட்டது. 12 வாரங்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்காதவர்களோடு ஒப்பிடும் போது தண்ணீர் குடித்தவர்களின் உடல் எடை 2.5 கிலோ வரை குறைந்து காணப்பட்டது தெரியவந்தது. பசியின் போது தண்ணீர் குடிக்கும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்து விடும். அதே நேரம் இதில் கலோரி எதுவும் இருக்காது. இதனால் உணவின் அளவு குறைந்து கலோரியின் அளவும் குறைவதால் உடல் பருமன் குறைகிறது என தெரிவித்தார். எனினும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என துல்லியமாக குறிப்பிடவில்லை. பொதுவாக ஒரு நாளைக்கு தண்ணீர் உள்ளிட்ட திரவப் பொருள் பெண்களுக்கு 9 கப் அவசியம். ஆண்களுக்கு 13 கப் தேவை என பரிந்துரைக்கப்படுகிறது. |
Saturday, 25 June 2011
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்: ஆய்வுத் தகவல்
இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன்
இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன் |
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 07:50.15 மு.ப GMT ] |
![]() கிராமங்களில்கூட பியூட்டி பார்லர்கள் பெருகி வருவதே இதற்கு சாட்சி. பணத்தை தண்ணீராய் செலவு செய்து முதுமையை மறைக்க படாதபாடு படுகின்றனர். மக்களின் மனநிலையை உணர்ந்து முதுமையை மறைக்கும் ஆரோக்கியமான வழிகள் குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பொப்கார்னும், பாலாடைக்கட்டியும்(சீஸ்) உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று இப்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முதுமையை மறைக்க எளிய வழிகளை பட்டியலிட்டுள்ளது. இதில் பிரதான இடம் பெற்றிருப்பது பொப்கார்னும், சீஸும் தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடலை வயது வித்தியாசமின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வயது முதிர்வும் தெரியாது. எலும்பு மற்றும் தசைகள், கண், மூளை, இதயம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் மெருகேறும். உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ அறிவுரைகள் இதற்கு உதவும். மேலை நாடுகளில் மிக பிரபலமாக இருந்த சீஸ் தற்போது நம் நாட்டு உணவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள அபரிமிதமான கால்சியம், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மட்டுமின்றி எலும்புகளும் வலுவிழக்கும். இந்த நிலையை சமாளிக்க அதிக அளவு சீஸ் எடுத்துக் கொள்ளலாம். சோயா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தசைகள் வலுப் பெறும். மல்டி வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்த கீரைகள், சாலட் வகைகள், ஆரஞ்சுப்பழம் போன்றவை கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெரும்பாலான சத்துகள் உள்ள பொப்கார்ன் உடலுக்கு மட்டுமின்றி இதயத்துக்கும் இதமளிக்கும். சால்மோன் மீன்களில் உள்ள சத்துகள் மூளைக்கு பலம் சேர்க்கும். பொதுவாக 40ஐ கடந்து விட்டவர்களின் அன்றாட உணவில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துகள், சுண்ணாம்பு, புரதம், தாதுக்கள் இடம் பெற வேண்டியது அவசியம் மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது ஆய்வாளர்கள் தரும் டிப் |
காளானின் மருத்துவ குணங்கள்
காளானின் மருத்துவ குணங்கள் |
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 01:53.13 பி.ப GMT ] |
![]() ஆனால் பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும். காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின்(lentysine), எரிட்டிடைனின்(eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். |
Monday, 20 June 2011
புற்றுநோய் செல்களை அழிக்கும் கேரட்
புற்றுநோய் செல்களை அழிக்கும் கேரட் |
[ சனிக்கிழமை, 18 யூன் 2011, 07:35.00 மு.ப GMT ] |
![]() கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. புற்றுநோய் செல்களை அழிக்கும்: நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு கேரட்டிற்கு மட்டுமே உள்ளது. இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துகிறது. கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள் தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. கண்பார்வை குறைபாட்டினை போக்கும்: வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் கேரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண் நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் சக்தி கேரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் கேரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச் சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது. பக்கவாதத்தை அண்டவிடாது: கேரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் கேரட்டினை உண்பவர்களை ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப்பார்ப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது. பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கேரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு கேரட் போக்கிவிடும். அல்சரை குணப்படுத்தும்: பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்த நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது. அல்சர் நோய் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் கேரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் எட்டிப்பார்க்காமல் செய்துவிடும். வயிற்றுக் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு கேரட் சிறந்த மருந்தாகும். வாரத்திற்கு 5 நாட்கள் கேரட்டை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் எதுவும் கலக்காமல் பருகி வர வாய் நாற்றம் ஓடியே போய் விடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு. எனவே நீரிழிவு நோயளிகள் காரட்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் சுரப்பு சீரடையும். |
பார்லியின் மருத்துவ குணங்கள்
பார்லியின் மருத்துவ குணங்கள் |
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 02:22.12 பி.ப GMT ] |
![]() பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான "டெக்ஸ்ட்ரின்" என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன. கஞ்சி தயார் செய்ய பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும் போது இந்தச் சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள். தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன் அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும். உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும். கெட்ட கொலஸ்ட்ராலைப்(எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும். கோதுமையிலும், ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்த போதிலும் தயாரிக்கும் பொழுது அவைகளிடத்திலிருக்கும் நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன. ஆனால் பார்லியில் பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை. இதுதான் பார்லியின் சிறப்புக் காரணம். இது உடம்பில் இருக்கிற சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பார்லியில் இருக்கும் நார்ச்சத்து சக்திமிக்கது. |
பளிச்' முகத்தைப் பெற...
'பளிச்' முகத்தைப் பெற...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நம் முன்னோர்களின் முதுமொழி. பழங்கால மருத்துவர்கள் முகத்தைப் பார்த்தே, அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிவார்கள்.
ஒரு மனிதனுக்கு அவனது ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக இருப்பது அவனது முகம்தான்.
சாதாரணமாக ஒருவர் முகத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு வெளிப்பூச்சு மருந்துகளுடன், உணவு முறை மாற்றமும் அவசியத் தேவையாகும்.
அன்றாட உணவில் ஏதேனும் ஒருவகை கீரை இடம்பெற்றிருப்பது அவசியமாகும். குறிப்பாக முருங்கைக்கீரை, அரைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இவைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகமாக நீர் அருந்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்ட பதப்படுத்தப் பட்ட உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தால் உடலுக்கும் முகத்திற்கும் எத்தகைய பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம்.
அதுபோல், தற்போது முக அழகைப் பாராமரிக்க என்று கூறி ரசாயனம் கலந்த முகப்பூச்சு கிரீம்கள் விற்கப்படுகின்றன. அவற்றை நம்பி வாங்கி உபயோகித்தால் முகப்பொலிவை மேலும் இழக்க வேண்டி வரும். எனவே எளிதான மூலிகைப் பொருட்களைக் கொண்டு உடலையும் அழகையும் பராமரித்துக்கொள்ளலாம்.
முகப்பரு நீங்க
சோற்றுக் கற்றாழை ஒரு துண்டு எடுத்து அதன் தோல் நீக்கி ஒரு ஸ்பூன் சந்தனத்தூள் கலந்து தினமும் முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன், முகப்பரு வடுக்களும் மாறும்.
பப்பாளி மரத்தின் பாலை எடுத்து, அதில் நீர் கலந்து நன்றாகக் குழைத்து சிறிதளவு சீரகப் பொடி சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு அதனை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகப்பருக்கள் மறையும். எண்ணெய் தோய்ந்த முகம் பளிச்சிடும். அம்மை வடுக்கள் மாற மேற்கண்டவற்றுடன் சிறிது கசகசா சேர்த்து பூசவேண்டும்.
ஆரஞ்சு பழச்சாறுடன், கொத்தமல்லி இலைச்சாறு, முல்தானி மட்டி சேர்த்து குழைத்து முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துபோகும்.
முகத்திலுள்ள தழும்புகள் மறைய
சந்தனப் பொடி, எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்படலம் நீங்கும்.
இவற்றுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடங்களில் பூசி 20 நிமிடம் காயவைத்து பயத்தமாவு கொண்டு கழுவினால் அம்மை வடுக்கள் நீங்கி முகம் பொலிவுறும்.
முகக் கருமை மாற
* குங்குமப் பூவை பாதாம் எண்ணெயில் கலந்து ஊறவைத்து அந்த எண்ணெயை முகத்தில் பூசி வந்தால், முகத்தில் படர்ந்துள்ள கருமை மறையும்.
* காய்ந்த ரோஜா இதழ், காய்ந்த செம்பருத்திப் பூ இவற்றுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகக் கருமை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் முகக்கருமை மறைந்து முகம் பிரகாசமாகும்.
* பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகக் கருமை மறையும்.
முழங்கை முட்டி சொரசொரப்பு மாற
சிலருக்கு முழங்கை முட்டிப் பகுதிகளில் கருமையடைந்து சிறு முட்கள் போல சொரசொரப்பாக காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து அப்பகுதிகளில் தொடர்ந்து தடவி வர சொரசொரப்பு நீங்கி சருமம் அழகு பெ
இதயம் காக்கும் காளான்
இதயம் காக்கும் காளான்


காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.
இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.
இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.
காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
காளான் வகைகள்
இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
காளான் மருத்துவ பயன்கள்
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசøரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
Subscribe to:
Posts (Atom)