'பளிச்' முகத்தைப் பெற...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நம் முன்னோர்களின் முதுமொழி. பழங்கால மருத்துவர்கள் முகத்தைப் பார்த்தே, அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிவார்கள்.
ஒரு மனிதனுக்கு அவனது ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக இருப்பது அவனது முகம்தான்.
சாதாரணமாக ஒருவர் முகத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு வெளிப்பூச்சு மருந்துகளுடன், உணவு முறை மாற்றமும் அவசியத் தேவையாகும்.
அன்றாட உணவில் ஏதேனும் ஒருவகை கீரை இடம்பெற்றிருப்பது அவசியமாகும். குறிப்பாக முருங்கைக்கீரை, அரைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இவைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகமாக நீர் அருந்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்ட பதப்படுத்தப் பட்ட உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தால் உடலுக்கும் முகத்திற்கும் எத்தகைய பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம்.
அதுபோல், தற்போது முக அழகைப் பாராமரிக்க என்று கூறி ரசாயனம் கலந்த முகப்பூச்சு கிரீம்கள் விற்கப்படுகின்றன. அவற்றை நம்பி வாங்கி உபயோகித்தால் முகப்பொலிவை மேலும் இழக்க வேண்டி வரும். எனவே எளிதான மூலிகைப் பொருட்களைக் கொண்டு உடலையும் அழகையும் பராமரித்துக்கொள்ளலாம்.
முகப்பரு நீங்க
சோற்றுக் கற்றாழை ஒரு துண்டு எடுத்து அதன் தோல் நீக்கி ஒரு ஸ்பூன் சந்தனத்தூள் கலந்து தினமும் முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன், முகப்பரு வடுக்களும் மாறும்.
பப்பாளி மரத்தின் பாலை எடுத்து, அதில் நீர் கலந்து நன்றாகக் குழைத்து சிறிதளவு சீரகப் பொடி சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு அதனை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகப்பருக்கள் மறையும். எண்ணெய் தோய்ந்த முகம் பளிச்சிடும். அம்மை வடுக்கள் மாற மேற்கண்டவற்றுடன் சிறிது கசகசா சேர்த்து பூசவேண்டும்.
ஆரஞ்சு பழச்சாறுடன், கொத்தமல்லி இலைச்சாறு, முல்தானி மட்டி சேர்த்து குழைத்து முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துபோகும்.
முகத்திலுள்ள தழும்புகள் மறைய
சந்தனப் பொடி, எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்படலம் நீங்கும்.
இவற்றுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடங்களில் பூசி 20 நிமிடம் காயவைத்து பயத்தமாவு கொண்டு கழுவினால் அம்மை வடுக்கள் நீங்கி முகம் பொலிவுறும்.
முகக் கருமை மாற
* குங்குமப் பூவை பாதாம் எண்ணெயில் கலந்து ஊறவைத்து அந்த எண்ணெயை முகத்தில் பூசி வந்தால், முகத்தில் படர்ந்துள்ள கருமை மறையும்.
* காய்ந்த ரோஜா இதழ், காய்ந்த செம்பருத்திப் பூ இவற்றுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகக் கருமை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் முகக்கருமை மறைந்து முகம் பிரகாசமாகும்.
* பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகக் கருமை மறையும்.
முழங்கை முட்டி சொரசொரப்பு மாற
சிலருக்கு முழங்கை முட்டிப் பகுதிகளில் கருமையடைந்து சிறு முட்கள் போல சொரசொரப்பாக காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து அப்பகுதிகளில் தொடர்ந்து தடவி வர சொரசொரப்பு நீங்கி சருமம் அழகு பெ
No comments:
Post a Comment