Saturday, 25 June 2011

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்: ஆய்வுத் தகவல்


சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்: ஆய்வுத் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 02:03.53 பி.ப GMT ]
ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் பருமனாவதை தடுக்க முடியும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் பிளாக்ஸ்பர்க் நகரில் உள்ள வெர்ஜினியா பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பிரந்தா தவி தலைமையிலான குழுவினர் உடல் பருமனை குறைப்பதில் தண்ணீரின் பங்கு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரு பிரிவினருக்கு தினமும் 3 வேளை சாப்பிடுவதற்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் வீதம் 12 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு தண்ணீர் கொடுக்காமல் சாப்பாடு கொடுக்கப்பட்டது.
12 வாரங்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்காதவர்களோடு ஒப்பிடும் போது தண்ணீர் குடித்தவர்களின் உடல் எடை 2.5 கிலோ வரை குறைந்து காணப்பட்டது தெரியவந்தது.
பசியின் போது தண்ணீர் குடிக்கும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்து விடும். அதே நேரம் இதில் கலோரி எதுவும் இருக்காது. இதனால் உணவின் அளவு குறைந்து கலோரியின் அளவும் குறைவதால் உடல் பருமன் குறைகிறது என தெரிவித்தார்.
எனினும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என துல்லியமாக குறிப்பிடவில்லை. பொதுவாக ஒரு நாளைக்கு தண்ணீர் உள்ளிட்ட திரவப் பொருள் பெண்களுக்கு 9 கப் அவசியம். ஆண்களுக்கு 13 கப் தேவை என பரிந்துரைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment