Saturday 12 January 2013

பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 07:06.09 மு.ப GMT ]
பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப் பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை.
சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப் பற்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவது.
அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை பற்களை துலக்குவதோடு, எதை சாப்பிட்ட பின்னரும் வாயை நீரினால் கொப்பளிக்க வேண்டும். அனைவருக்குமே சில உணவுகள் பற்களுக்கு நல்லது மற்றும் சில உணவுகள் கெட்டது என்பது தெரியும். அதிலும் பற்களுக்கு போதிய சத்துக்கள் இல்லையெனில் பற்களை கிருமிகள் எளிதில் தாக்கும். ஆகவே அவற்றிற்கு பலத்தை கொடுக்கும் வகையில், நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது பற்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாமல், கிருமிகளை எதிர்த்துப் போடும் சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போமா!!!
இனிப்பில்லாத பழங்கள்
திராட்சை மற்றும் பீச் போன்ற பழங்களை சாப்பிட்டால், அவை பற்களின் துவாரங்களில் சிக்கிக் கொண்டு, அதில் உள்ள இனிப்புகள் துவாரங்களில் தங்கி கேடு விளைவிக்கும். ஆகவே அப்போது இனிப்புகள் குறைவாக உள்ள பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். உதாரணமாக வெள்ளரிக்காயை சாப்பிடலாம்.
உலர் திராட்சைகள்
உலர் திராட்சைகளில் ஒரு சில ப்ளேவோனாய்டுகள் மற்றும் போட்டோபீனால் இருப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை கட்டுப்படுத்தும். இறுதியில் எந்த சொத்தைப் பற்கள் வராமல் இருக்கும்.
நார்ச்சத்துள்ள காய்கறிகள்
மற்ற உணவுப் பொருட்களை விட சில காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் கேரட், பச்சை இலைக்காய்கறிகள் போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சொத்தைப் பற்கள் ஏற்படாமல் தடுக்கும்.
தானியங்கள்
சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் தானியங்கள் கூட பற்களுக்கு சிறந்தது. அதிலும் சொரசொரப்பான தானியங்களான கம்பு, சோளம் மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவை கூட பற்களில் ஏற்படும் சொத்தைகளை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
கடல் உணவுகள்
கடல் உணவுகளான இறால், கடல் சிப்பிகள் போன்றவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை பற்களை வலுவாக்கி, கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கின்றன.
இனிப்பில்லாத சூயிங் கம்
சாதாரணமாக சூயிங் கம் பற்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அவ்வாறு அவற்றை மெல்லும் போது வாயில் ஒருசில அமிலங்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அவை பற்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு படலத்தை உண்டாக்குகின்றன. ஆகவே அதற்கு இனிப்பில்லாத சூயிங் கம்மை சாப்பிட்டால் நல்லது.
புதினா இலைகள்
பொதுவாக புதினா ஒரு இயற்கை கிருமிநாசினி. ஆகவே எந்த ஒரு இனிப்புகளை சாப்பிட்டாலும், உடனே சில புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், பற்களில் கிருமிகள் தங்காமல் இருக்கும்

No comments:

Post a Comment