Saturday 12 January 2013

கால்சியச் சத்து மிகுந்த உணவுக

கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
[ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 12:23.48 பி.ப GMT ]
உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது.
கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.
பால்
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும்.
அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.
மத்தி மீன்
மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.
சீஸ்
பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
பச்சை இலைக்காய்கறிகள்
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.
ஓட்ஸ்
ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

No comments:

Post a Comment