பார்த்தேன்... கேட்டேன்...
மனித உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளில்தான் எத்தனை வகை?
ஆனாலும், அத்தனைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விடை கண்டு, அவற்றை வழி முறைகளாகவும் எழுதி வைத்த நமது முன் னோர்களின் தீர்க்கத்தரிசனம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
அந்த பெண், தனது குழந்தையுடன் என்னை வந்து சந்தித்து, நினைவிருக்கிறதா சார் என்று கேட்டபோது என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
காலம், நம் நினைவுப் பேழைகளில் இருந்து நம்மைக் கேட்காமலே பல சுவடுகளைக் களவாடிச் சென்று விடும் என்ற உண்மையை பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.
அந்த பெண், தன்னைக் குறித்து கேட்டபோதும், அதே சிந்தனைதான் எனக்கு வந்தது. மிகவும் சிரமப்பட்டு என் நினைவின் அடுக்குகளைப் புரட்டிப் பார்த்த போதும் பலனில்லை, பின்னர் அவளே சொன்னபோதுதான், அந்த பெண் குறித்த சம்பவங்களின் பிளாஷ்பேக் எனக்குள் சுருள் சுருளாய் விரியத் தொடங்கின.
ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் இருந்து அந்த பெண்ணை அழைத்து வந்தனர். அந்த பெண்ணிற்கு 19 அல்லது 20 வயது இருக்கும். அவளுக்கு 13 வயதிலிருந்து இடைவிடாத விக்கல். பலமுறை என்னைக் கொன்றுவிடுங்கள் அம்மா.. இப்படி விக்கிக்கொண்டே எவ்வளவு காலம்தான் நான் உயிரோடு இருப்பது? என்று அவள் வேதனை பொறுக்க முடியாமல் கெஞ்சியபோது, பெற்றோரின் உயிரில் பாதி போய்விடும். இந்த பிரச்சனையால் அவளது படிப்பில் இருந்து திருமணம் வரைக்கும் கேள்விக்குறியாகிவிட்டது.
வகைவகையான ஸ்கேன்கள், விதவிதமான பரிசோதனைகள், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ மனைகளில் சிகிச்சை என்று அவர்களின் பணம் கரைந்ததுதான் மிச்சம். விக்கல் நின்றபாடில்லை. குடல் சிறுத்துவிட்டது என்றும், உணவுக் குழலில் அடைப்பு என்றும், பல விதமாகச் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்கள். காரணமே தெரியாத இந்த விநோத நோயால் விரட்டப்பட்ட அந்த குடும்பம், வேதனையின் விளிம்புக்கே வந்து விட்டது.
எப்படியோ என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு கடைசி முயற்சியாக என்னிடம் வந்து சேர்ந்தார்கள். விக்கல் என்று சொன்ன உடனேயே அதற்கான காரணம் என்ன என்பதை என்னால் அறிய முடிந்தது. நோய் நாடி, அது தணிக்கும் வாய் நாடி , என்பதுதானே நமது சித்தர்களின் வழிமுறை. அவர்கள் அறியாத நோயா ? மருந்தா?
அந்த பெண்ணின் நாடியை மட்டும் பிடித்துப் பார்த்தேன். அபாண வாயு சூடேறி, கூம்பு வாயுவுடன் கலக்கும்போதுதான் விக்கல் உண்டாகிறது என்று எளிமையாக சொன்னால் அவர்கள் நம்ப வேண்டுமே...
விக்கலால் அந்த பெண் உடல் உலர்ந்து மெலிந்து போய் அந்த வயதிற்கு உரிதான இளமை தோற்றத்தில் குன்றி காணப்பட்டாள்.
மூன்று மாதம் சிகிச்சை மட்டும் எடுத்துக்கொள்ளும்படி கூறி, அதற்கான மருந்துகளைக் கொடுத்தேன்.
ஒரு மாதத்திலேயே குணம் தெரியத் தொடங்கியது. விக்கல் போயே போச்... குடும்பமே குதூகலத்தில் துள்ளத் தொடங்கியது. மூன்று மாதங்களில் முழுமையாக குணமடைந்தாள். ஆறுமாதங்களில் திருமணமும் கைகூடியது. அழைப்பிதழுடன் அந்த குடும்பமே என்னை வந்து பார்த்த போது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல் அழகும், வயதுக்கேற்றாற்போல் வளர்ச்சியும் கொண்ட பெண்ணாக மாறினாள்.
பல ஆண்டுகள் கழித்து வந்து என்னைப் பார்த்து நினைவிருக்கிறதா என்று அதே மகிழ்ச்சியுடன் அந்த பெண் என்னைப் பார்த்துக் கேட்டபோதும், அதே பெருமிதம் என்னுள் படர்ந்தது.
எல்லாம் அந்த சித்தர்களின் சித்தம். என்னால் எதுவும் இல்லை.
குறிப்பு
விக்கல் என்பது குடலில் உள்ள அபான வாயு அலர்ஜி ஏற்பட்டு இரைப்பையை தாக்கி அதோடு கூம்பு வாயுவையும் சீர்குலைத்து உடலை மேல்நோக்கி தூக்குவதுதான்.
வர்ம பரிகார முறையில் சித்தர்களின் கூற்றுப்படி விக்கல் நோய்க்கு வர்ம மருத்துவத்தில் பல மருந்துகள் கூறப்பட்டுள்ள
No comments:
Post a Comment