Saturday, 4 June 2011

உணவில் கீரைகளை சேர்ப்பதனால் ஏற்படும் பலன்கள்


உணவில் கீரைகளை சேர்ப்பதனால் ஏற்படும் பலன்கள்
[ புதன்கிழமை, 01 யூன் 2011, 07:33.06 மு.ப GMT ]
உங்களது உணவில் கட்டாயம் கீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிலிருந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை விடாது வலியுறுத்தி வருகிறார்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது புத்தகத்திலோ கீரையின் மகத்துவத்தை பற்றி படிக்கையில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்களில் அதனை நடைமுறைப்படுத்துவர்கள் மிகச் சிலரே.
நம்மில் பெரும்பாலானோருக்கு அது இளவயதினராக இருந்தாலும் சரி அல்லது முதியவர்களாக இருந்தாலும் சரி, ஆணோ அல்லது பெண்ணோ கீரையை உணவில் எடுத்துக் கொள்வது என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. அதே சமயம் கீரையின் மகத்துவத்தை பற்றி மருத்துவர்களை காட்டிலும் ஏகமாக மற்றவர்களுக்கு பரிந்துரைப்பார்கள்.
இப்படி மற்றவர்களுக்கு பரிந்துரைப்பதை காட்டிலும் நாமும் அதனை கடைபிடித்தோமானால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம். ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்த கீரைகள், குறைந்த கலோரி கொண்டவை என்பதோடு மட்டுமல்லாது கொழுப்பு சத்து இல்லாததும் கூட.
அதுமட்டுமல்லாது கீரை வகைகள் உடலுக்கு எந்தெந்த விதமான பலன்களை அளிக்கிறது.
1. கீரைகளை பச்சையாக உண்டால் அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அப்படியே கிடைக்குமாம். ஆனால் சமைத்த கீரையை சாப்பிடுவதே நம்மவர்களுக்கு பெரும்பாடாக இருக்க பச்சை கீரை அளவுக்கு போகாவிட்டாலும், சமைத்த கீரையையாவது சாப்பிடலாம்.
2. கீரையில் வைட்டமின்கள் பி6, சி, இ, போலிக் அமிலம், மாங்கனீஸ், குரோமியம் போன்ற தாதுக்கள் இடம்பெற்றுள்ளன.
3. தலைமுடி சரிவர வளராதவர்கள் கூட கீரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்.
4. புதினாவில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. தலைவலி, மைக்ரேன், ஜலதோஷம் மற்றும் வயிற்று வலி போன்றவற்றுக்கு சிறிதளவு புதினா இலைகளை வாயில் மெல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் புதினாவை வழக்கமாக சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறிவிடும்.
5. துளசி இலை வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டுள்ளது. மேலும் புதினாவில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் கரோட்டின் ஆகியவை உள்ளதால் அது தோலுக்கு மிகவும் நல்லது.
6. கொத்துமல்லிக் கீரையில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் கால்சியம், சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொத்துமல்லிக் கீரை கலோரி இல்லாதது என்பதோடு அது உடலில் உள்ள கலோரிகளையும் எரிக்கக்கூடியது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது மிகவும் நல்லது

No comments:

Post a Comment