Thursday, 9 June 2011

சரக்கரை நோய்க்கு மருந்தாகும் ஆப்பிள் தோல்


 
   
   
 
   
 
ஆராய்சி செய்தி
சரக்கரை நோய்க்கு மருந்தாகும் ஆப்பிள் தோல்
[ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 02:18.14 பி.ப GMT ]
ஆரோக்கியமாக வாழ தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும். மருத்துவர் பக்கமே தலைகாட்ட வேண்டியது இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்.
ஆப்பிளை சாப்பிடும் போது பலர் தோலை உரித்து விட்டு உள்ளே இருக்கும் பகுதியை சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் சரியான பலன் இல்லை. ஆப்பிள் தோலில் உள்ள யுர்சோலிக் அமிலம் தசை கட்டமைப்புக்கு வெகுவாக உதவுகிறது.
கொலஸ்ட்டிரால் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கும் ஆப்பிள் தோலில் உள்ள யுர்சோலிக் அமிலம் உதவுகிறது. ஆப்பிள் தோலில் உள்ள யுர்சோலிக் அமில பயன்பாடு குறித்து ஆய்வு செய்த யு.எஸ் ஆய்வாளர் மருத்துவர் ஆடம்ஸ் இந்த உண்மையை எடுத்துரைத்தார்.
வயதான காலத்தில் தசைப் பாதிப்பு என்பது அடிக்கடி ஏற்படும் ஒன்றாகும். ஆப்பிளை தோலுடன் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த பிரச்சனை தவிர்க்கப்படுகிறது.
யுர்சோலிக் அமிலம் இன்சுலின் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகளுக்கும் உதவுகிறது. தசை வளர்ச்சிக்கு முக்கியமாக உதவும் 2 ஹோர்மோன்களை தூண்டுவதற்கு யுர்சோலிக் அமிலம் வெகுவாக உதவுகிறது.
மருத்துவர் ஆடம்சின் கண்டுபிடிப்பு திசு ரசாயன மாற்ற இதழில் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment