Wednesday, 11 May 2011

எப்போதும் இளமையாக இருக்க அதிகம் படியுங்கள்


எப்போதும் இளமையாக இருக்க அதிகம் படியுங்கள்
[ புதன்கிழமை, 11 மே 2011, 08:37.05 மு.ப GMT ]
கூடுதலான கல்வித் தேர்வுகளை எழுதி துடிப்புடன் இருப்பவர்கள் மிக இளமையாக இருக்கிறார்கள் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிக கல்வித் தகுதிக்காக படிக்கும் நபர்கள் தங்களது வயது ஒத்த அதிக கல்வி தகுதி இல்லாத நபர்களை காட்டிலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தேர்வுகளில் அதிக சாதனை படைக்காதவர்கள் மிக விரைவில் வயோதிக தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். கல்விச் சாதனைக்காக தொடர்ந்து படிக்கும் நபர்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதால் அவர்களது சமூக பொருளாதார நிலையில் பிற்காலத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
லண்டனின் பல்கலைகழக ஆய்வாகளர்கள் அலுவலகம் செல்லும் 450 பேரை ஆய்வு செய்ததில் இளமை குறித்த ரகசியத்தை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். உயிரி வயோதிகத்தன்மையை குரோமோசோம் கடிகாரம் நிர்ணயிக்கிறது.
கூடுதல் நேரம் அல்லது கூடுதல் கல்விச் சாதனை மேற்கொள்பவர்களின் மூளைத்திறன் மிக துடிப்புடன் செயல்படுவதால் அவர்கள் தங்களது வயதை ஒத்தவர்களுடன் ஒப்பிடும் போது மிக இளமையானவர்களாக இருக்கிறார்கள்.
இனிமேல் ஆசிரியரோ அல்லது பெற்றோரோ படிக்குமாறு அறிவுரை கூறினால் முகம் சுளிக்காமல் படிக்கத் துவங்கலாம். நீண்ட படிப்பு நீண்ட இளமையை தரும் என்பதையே இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

No comments:

Post a Comment