நரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்: மருத்துவத்துறையின் வளர்ச்சி |
[ வியாழக்கிழமை, 03 மார்ச் 2011, 11:58.09 மு.ப GMT ] |
மிகவும் சிக்கலான அறுவைச்சிகிச்சைகளின்போது நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்குக் கஷ்டமான விஷயம். மருத்துவர்களின் இந்தக் கஷ்டத்தைப் போக்கும்வகையில் ஓர் ஒளிரும் திரவத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டீகோ மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் குழு இதைத் தயாரித்திருக்கிறது. இதில் முக்கியமாக, அமினோ அமிலங்கள் அடங்கிய நுண் புரதத் துணுக் குகள் இருக்கின்றன. இனிமேல், மிக நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தையோ, எலக்ட்ரானிக் வழி கண்காணிப்பையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை. அறுவைச் சிகிச்சைக்கு முன் செலுத்தப் படும் இந்தத் திரவம், நரம்புகளை ஒளிரவைத்து, அவற்றை `பளிச்’ சென்று வெளிப்படுத்தும். அறுவைச் சிகிச்சையின்போது தவறான நரம்பைத் தேர்ந்தெடுத்துவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் அது கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும் அல்லது உடம்பின் ஒரு பகுதியைச் செயலிழக்க வைக்கக்கூடும் என்கிறார்கள். ஆரம்பகட்டமாக, எலிகளுக்கு இந்தத் திரவத்தைச் செலுத்தி ஆய்வாளர்கள் பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, அதன் நரம்புகளுக்கும் மற்ற செல்களுக்கும் இடையே அது ஒரு தெளிவான வேறு பாட்டைக் காண்பிப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். |
Thursday, 5 May 2011
நரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்: மருத்துவத்துறையின் வளர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment