இதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான் |
[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 07:03.09 மு.ப GMT ] |
இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய் தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை. குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வருகிறது. இதய நோய்க்கு எண்ணைய் தான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எண்ணெய் ஊற்றி சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது. எனவே எண்ணைய் இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதய நோய் இருப்பவர் மட்டுமல்ல ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட எண்ணைய் பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஒவ்வொரு உணவிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலமாகவும் குறைக்க முடியும். பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம். |
Thursday, 5 May 2011
இதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment