சில வகை காய்கறிகளின் மகத்துவங்கள் |
[ திங்கட்கிழமை, 31 சனவரி 2011, 04:33.44 மு.ப GMT ] |
காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் மனித உடலுக்குத் தேவையான ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் எந்த மருத்துவரிடம் சென்றாலும், அதிகமாக காய்கறியும், கீரையும் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். வெண்டைக்காய்: வெண்டைக்காயில் பி மற்றும் சி சத்துக்களும், உயிர்ச்சத்துக்களும் இருக்கின்றன. இதனை சமைக்கும் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு வெண்டைக்காய் நல்ல மருந்தாகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் மட்டும் வெண்டைக்காயை குறைவாக உண்பது நல்லது. கத்தரிக்காய்: இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றுதான். சுவையில் மட்டுமே கத்திரிக்காயில் மாற்றம் உண்டு. பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம் போன்ற பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்துகிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கத்திரிக்காய் நல்லது. அம்மை நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் கத்திரிக்காய்க்கு உண்டு. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். அதில்லாமல் ஏற்கனவே சரும வியாதி இருப்பவர்கள் கத்திரிக்காயை உண்பதால் வியாதி அதிகரிக்கும். நமைச்சல் உண்டாகும். முள்ளங்கி: வேர்ப்பகுதியில் உருவாகும் காய் முள்ளங்கியாகும். முள்ளங்கியில் ஏ சத்து அதிகம் இருப்பதால் கண் பார்வைக்கு அதிகம் உதவுகிறது. இதில் சோடியம் மற்றும் குளோரின் இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்தும். வயிற்று எரிச்சல், புளியேப்பம் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு. தீப்புண்களுக்கும் முள்ளங்கிச் சாறு மருந்தாகப் பயன்படும். மேலும் முள்ளங்கியில் கால்ஷியம், மாங்கனீஸ் கலந்துள்ளதால் பெண்களுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள், முள்ளங்கிச் சாற்றில் கற்கண்டு கலந்து குடித்து வந்தால் கரு நிலைக்கும். அவரைக்காய்: கொடியில் காய்க்கும் காயில் அவரைக்காய்க்கு முதலிடம் உண்டு. இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். புடலங்காய்: நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. மேலும், உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. பீட்ரூட்: பீட்ரூட் என்றதும் எல்லோருமே சொல்லிவிடுவார்கள், இது ரத்த விருத்திக்கு உதவும் என்று, அது மட்டுமல்ல பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கொத்தவரக்காய்: இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும். சுரைக்காய்: இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். |
Thursday, 5 May 2011
சில வகை காய்கறிகளின் மகத்துவங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment