Thursday, 5 May 2011

மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்


மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்
[ செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011, 08:20.18 மு.ப GMT ]
தொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்தக் குறைபாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜீன் மாதம் வெளியிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.
ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்

No comments:

Post a Comment