Wednesday, 4 May 2011

பாலின் நன்மைகள்


பாலின் நன்மைகள்
[ புதன்கிழமை, 04 மே 2011, 01:58.47 பி.ப GMT ]
இளம் பருவ பெண்கள் அயோடின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி அவதிப்படுகின்றனர். இந்த குறைபாடு காரணமாக அவர்களது எதிர்கால குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளது.
இளம் பருவப் பெண்கள் அளவு குறைவாக பால் அருந்துவதால் இத்தகையப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வளர் பருவத்தினர் ஒரு நாளில் மூன்று பகுதி பால் பொருட்களை கால்சியம் சத்துக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இதர பால் பொருட்களை விட நேரடி பாலில் அதிக ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
பாலில் ஏ, சி, டி, இ, கே மற்றும் பி வைட்டமின்களும், மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் தாதுக்களும் உள்ளன. நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களுக்கு பால் அத்தியாவசியம் ஆகும்.
பால் குடிப்பதை தவிர்ப்பதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். பாலில் புரதமும் உள்ளது. இந்த புரதம் உடல் திசுக்கள் சீரமைப்புக்கும், பராமரிப்புக்கும் உதவும் என பிரிட்டிஷ் உளவு முறைமை சங்க அன்னா ரேமாண்ட் தெரிவித்தார்.
200 மி லி பாலில் 134 கலோரிகள் உள்ளன. உணவுக் கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு பால் எதிரி அல்ல என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சொக்லேட் துண்டில் உள்ள சர்க்கரை அளவை விட பாலில் சர்க்கரை அளவும், கலோரி அளவும் குறைவாகவே உள்ளன.
பால் அதிக கொழுப்புள்ள உணவாக இல்லை. எனவே கலோரி பயம் இல்லாமல் அனைவரும் போதிய அளவு பால் குடிப்பது நல்லது.

No comments:

Post a Comment