Sunday, 21 August 2011

உளுந்து பாயசம்


உளுந்து பாயசம்

எம்.ரம்யா - Tuesday, July 12, 2011
Urad Dal Kheer - Cooking Recipes in Tamil
பாயசத்தில் சேமியா பாயசம், ரவை பாயசம், அரிசி பாயசம்னு செஞ்சுருப்பீங்க....உளுந்து பாயசம் செஞ்சுருக்கீங்களா...இது வழக்கமான பாயசத்தை விட வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உளுந்து உடம்புக்கு வலுவானதும்கூட. அதோடு இதுல புரோட்டீன் சத்தும் நிறைய இருக்கு. அப்பறம் என்னங்க.. உடனே செஞ்சு அசத்திட வேண்டியதுதானே.....

தேவையான பொருட்கள்:
உருட்டு உளுந்து - 100 கிராம்
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 350 கிராம்
உப்பு - 1 டீ ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - 10
செய்முறை:
உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு சிறிதளவு தண்ணீ­ர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு அதில் உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்த உளுந்து, உப்பு, தேங்காய் பால் கலவையை ஊற்றவும்.
கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீ­ர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிண்டி விடவும்.
சிறிது நேரம் கழித்து கெட்டியாகி உளுந்து வாசம் வீசும்.
இப்போது சர்க்கரையை சேர்த்து இறக்கவும்.
முந்திரிப் பருப்பை துறுவி இறக்கி வைத்த பாயசத்தில் சேர்க்கவும்.
குறிப்பு: பாயசம் கெட்டியாக இருப்பதை விரும்பாதவர்கள் நிறைய தண்­ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இனிப்பும் போதாது என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment