ஆட்டுக்கால் சூப்
தேவையான பொருட்கள்
ஆட்டுக் கால் - 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் - 2
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 1
மல்லிப்பொடி – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
இஞ்சியை தோல் சீவி பூண்டுடன் சேர்த்து தட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடி பண்ணவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பொடி செய்ததைப் போட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு தட்டி வைத்துள்ளதையும் சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, உப்பு, ஆட்டுக்கால் சேர்த்து வதக்கி தேவையான அளவு வெந்நீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பை குறைத்து வைத்து அரை மணி நேரம் வேக விடவும். கால் நன்கு வெந்தவுடன் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment