Sunday, 21 August 2011

வெந்தயக்கீரை சூப்


வெந்தயக்கீரை சூப்

Post image for வெந்தயக்கீரை சூப்
 
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை - 1 கட்டு
தக்காளிப்பழம் - 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் - 1
பால் - 100 மி.லி
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1  டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும். பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு அது நன்கு காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் மாவைப் போட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர் விடவும். தண்ணீர் சூடாகியதும் கீரையைப் போடவும். எல்லாம் வெந்து கரைந்ததும் அதில் பாலைச் சேர்க்கவும். மிளகுப்பொடி, உப்பு சேர்த்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து பரிமாறவும்.

Related posts:

No comments:

Post a Comment