Sunday 21 August 2011

முட்டை சூப்


முட்டை சூப்

Post image for முட்டை சூப்
 
தேவையான பொருட்கள்
முட்டை – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1/2 இன்ச்
தக்காளி – 2
பச்சை மிளகாய் - 1
பிரிஞ்சி இலை - 1
நெய் – 1/2 டீஸ்பூன்
பட்டை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முட்டையை உடைத்து எக்பீட்டர் அல்லது ஸ்பூன் பயன்படுத்தி அடித்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பட்டையை பொடி செய்யவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி இவற்றை அரைத்து ஆறு கப் நீரில் கரைத்து வடிகட்டவும். இதில் உப்பு, பிரிஞ்சி இலை சேர்த்து மூடி வைத்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்து நுரைக்கும் போது தீயைக் குறைத்து விட்டு, முட்டையை ஸ்பூன் ஸ்பூனாக எடுத்து விடவும். முட்டைக் கலவை முழுவதையும் ஊற்றியதும் அது வெந்து மேலே வந்து மிதந்ததும் இறக்கவும். இதில் மிளகு, சீரகம், பட்டை பொடி செய்ததைச் சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Related posts:

No comments:

Post a Comment