நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான் |
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 01:30.26 பி.ப GMT ] |
உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை "வருமுன் காப்போம்" என்பது தான் தலைசிறந்த வழி. நோய் தாக்குதலுக்கு ஆளாகி அவஸ்தைபட்டு பின்னர் அதிலிருந்து விடுபட நடவடிக்கை மேற்கொள்வதைவிட வரும்முன் காப்பதே சிறந்தது. இன்றைய ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வுகள் குறித்த ஆய்வுகளும் மறுபுறம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வருமுன் காத்துக் கொள்ள பல பரிந்துரைகளை மருத்துவர்களும் வல்லுனர்களும் பட்டியலிடுகின்றனர். இந்தப் பட்டியலில் இயற்கையின் கொடை அதிகம். இந்த வரிசையில் மஷ்ரூம் எனப்படும் காளான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் மார்பக மற்றும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோயில் இருந்து காளான் பாதுகாப்பு அளிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குறைந்த கலோரியை கொண்ட இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளானில் உள்ள எர்கோ தையானின் என்ற மூலப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய்த்தாக்குதல் வாய்ப்புகள் குறையும். சைவ உணவான காளானில் மீன்எண்ணெய்க்கு நிகராக வைட்டமின் டி சத்து மிக அதிக அளவில் உள்ளது. இந்த சத்து நேரடியாகவும் உடனடியாகவும் காளானில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. |
Sunday, 7 August 2011
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment