அரைக்கீரை சூப்
தேவையான பொருட்கள்
அரைக்கீரை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
தக்காளிப்பழம் - 1
தண்ணீர் - 500 மி.லி
எலுமிச்சம்பழச்சாறு - 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை
பூண்டு, பெரிய வெங்காயம், தக்காளி, அரைக்கீரை முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் விட்டு பயத்தம் பருப்பை நன்றாக குழைய வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும், பூண்டையும் நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். அதில் சீரகப் பொடி, நறுக்கிய தக்காளிப்பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் கீரையையும் சேர்த்து கொதிக்க விடவும். கீரை வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து பரிமாறவும்.
No comments:
Post a Comment