Sunday 21 August 2011

பீட்ரூட் சூப்


பீட்ரூட் சூப்

Post image for பீட்ரூட் சூப்
 
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய எலுமிச்சம் பழத்தோல் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
புதினா இலை - 20
கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 லிட்டர்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றபடி
செய்முறை
பீட்ரூட்டின் தோலை நன்கு சீவி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வைத்துச் சூடாக்கிய வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு 2 நிமிடம் வதக்கவும், பின்பு நறுக்கிய பீட்ரூட், தண்ணீர், நறுக்கிய எலுமிச்சம் பழத்தோல் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் எலுமிச்சம் தோலை எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்து இறக்கி வைத்து பின்பு அதில் புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Related posts:

No comments:

Post a Comment