Sunday 21 August 2011

http://samayal.chettinadrecipes.com/மிளகுத் தண்ணி சூப்


மிளகுத் தண்ணி சூப்

Post image for மிளகுத் தண்ணி சூப்
 
தேவையான பொருட்கள்
மட்டன் – 1/2 கிலோ
ஸ்டாக் வாட்டர் - 250 மி.லி.
மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
தக்காளி – 2
இஞ்சி – 1 இன்ச்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் – 5
வெங்காயம் – 1
தேங்காய்ப்பால் - 1 கப்
எலுமிச்சம் ஜுஸ் - 1 டீஸ்பூன்
அன்னாசிப் பூ - சிறிது
மிளகுத்தூள் – தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி துருவிக் கொள்ளவும். மட்டனுடன், மல்லிப் பொடி, தக்காளி, இஞ்சி, மஞ்சள், சீரகம், பட்டை, கறிவேப்பிலை, உப்பு போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும். வெந்தவுடன் வடிகட்டி அந்த ஸ்டாக்கை எடுத்துக் கொள்ளவும். பட்டையையும், ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் வெந்தயம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் வேக வைத்த மட்டன், வடிகட்டி வைத்துள்ள ஸ்டாக், தேங்காய்ப் பால், மிளகுப்பொடி போட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக அன்னாசிப் பூ பொடி, எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Related posts:

No comments:

Post a Comment