வேப்பம்பூ சூப்
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ - 1 தேக்கரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
தண்ணீர் - 300 மி.லி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
செய்முறை
வேப்பம்பூவை நெய்யில் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பை நீரிலிட்டு குழைய வேகவிட்டு எடுக்க வேண்டும். பிறகு நீரில் புளியை உப்புடன் சேர்த்துக் கரைத்து, மிளகுத்தூள் போட்டு கொதிக்க விடவும். புளிக்கரைத்த கொதி நீர் பாதியளவாக வற்றியதும் அதில் பருப்பு நீரை விட்டு, அத்துடன் வேப்பம்பூ சேர்த்து கொதிக்கச் செய்ய வேண்டும். கொதித்ததும் இறக்கி விடவும். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் சிறிது கடுகும். கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்துக் கொட்டி சூப்புடன் கலக்கிச் சிறிது நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment