Sunday 21 August 2011

அவரைக்காய் சூப்


அவரைக்காய் சூப்

Post image for அவரைக்காய் சூப்
 
தேவையான பொருட்கள்
அவரைக்காய் - 100 கிராம்
தக்காளி - 1
தண்ணீர் - 300 மி.லி
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
வெங்காயம் - 1
கார்ன் ப்ளார் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை
அவரைக்காய், கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைக்கவும், சூடானவுடன் வெண்ணெய் விட்டு நறுக்கிய அவரைக்காய், காரட், வெங்காயத்தை மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். கார்ன் ப்ளார் தவிர்த்து எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைமணி நேரம் அடுப்பில் வேக வைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் கார்ன் ப்ளாரை தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பிலுள்ள சூப்போடு சேர்க்கவும். சூப் சிறிது கெட்டியானவுடன் மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Related posts:

No comments:

Post a Comment