புதினா சூப்
தேவையான பொருட்கள்
புதினா - 1 கப்
தக்காளிப் பழம் - 1
முட்டை கோஸ் - 100 கிராம்
கார்ன் ப்ளார் - 2 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
பால் - 100 மி.லி
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை
புதினா, தக்காளி, கோஸ், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெண்ணெய்யை உருக்கி வெங்காயம், இஞ்சி, நான்கு பற்கள் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும். கோஸையும் ஒரு நிமிடம் வதக்கவும். மாவையும் உடன் சேர்த்து வதக்கவும். பிறகு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பிறகு சூப்பை உப்பு மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பால் சேர்த்து பரிமாறவும்.
No comments:
Post a Comment