மீன் சூப் – 2
தேவையான பொருட்கள்
பெரிய நெத்திலி மீன் – 1/4 கிலோ
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன்
முட்டை – 1
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
புளி – சிறிது
செய்முறை
நெத்திலி மீனை சுத்தம் செய்து, கார்ன்ஃப்ளார், முட்டை, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கெட்டியாகப் பிசறி வைக்கவும். தக்காளி, புளி, பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து 4 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் மிளகாய் வற்றலை கிள்ளி தாளித்து, கரைத்து வைத்துள்ள தக்காளி புளி நீரை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்கும் போது, பிசறி வைத்துள்ள மீனை சேர்த்து, மிளகு சீரகத்தை பொடி செய்து மீனோடு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment