பச்சைப்பட்டாணி சூப்
தேவையான பொருட்கள்
தோல் உரித்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
சூடான பால் - 100 மி.லி
கிரீம் - 50 கிராம்
உப்பு, மிளகுத்தூள் - தேவையானவை
செய்முறை
பச்சைப் பட்டாணியைத் தேவையான தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்து அதனுடன் பால் சேர்த்து மீண்டும் சூடாக்கிக் கொள்ளவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறும் முன் கிரீம் சேர்த்துக் ஆறும் முன் பரிமாறவும்.
No comments:
Post a Comment